விஜய் டிவியின் காமெடி நடிகராக வலம் வருபவர் பாலா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரை சிரிக்க வைத்து இருக்கிறார். இந்த நிலையில் பாலா தற்போது தனது வழக்கமான பரட்டை முடியை வெட்டி செம ஹேண்ட்சமாக மாறி இருக்கிறார். அந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் சாமானியராக உள்ளே நுழைந்து தனது திறமையை காட்டி சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வருபவர் KPY பாலா. இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்தார். மேலும் யாராவது ஒரு கவுண்ட்டர் சொன்னால் அதற்கு உடனே பதில் கவுண்ட்டர் சொல்வதில் கை தேர்ந்தவராக இருக்கிறார். அதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டு இரவு பகல் பாராமல் ஸ்கிரிப்ட் எழுதி தன்னைத்தானே தயார் படுத்திக் கொள்வார். இந்த நிலையில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில் கோமாளியாக களமிறங்கினார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பாலாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த நிலையில் பாலா தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை காட்டி மக்களை மகிழ்வித்து வருகிறார். விஜய் டெலிவிஷன் அவார்டில் கூட அவருக்கு சிறந்த காமெடியன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவும் காதலித்து வருவதாக சிலர் வதந்திகளை கிளப்பி விட்டனர். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கிவிட்டார். ரித்திகாவின் திருமண வரவேற்புக்கு சென்று கலந்து கொண்டு அந்த வதந்தியை பொய்யாக்கி இருந்தார் பாலா. இந்த நிலையில் பாலா தற்போது ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் வழக்கமாக இருக்கும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி அவர் புதிய லுக்கிற்கு மாறி இருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்த பலரும் பாலா இந்த புது லுக் உனக்கு நன்றாக செட் ஆகிறது. சூப்பராக இருக்கிறது. இனிமேல் இப்படியே வைத்துக் கொள் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ஜூனியர் தனுஷ் போல் இருப்பதாகவும் கமெண்ட்களில் பாலாவை கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O