எனக்காக வேண்டிக்கோங்க.! மருத்துவமனையில் இருந்து ஆலியா மானசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!

ஆலியா மானசாவுக்கு தற்போது கால் உடைந்து இருக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனக்காக வேண்டிக்கொள்ளுமாறு பதிவிட்டு இருக்கிறார். மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ஆலியா மானசா. இதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வீட்டு வேலைக்காரியாக செம்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இந்த சீரியலின் கதாநாயகனான சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஆலியா. ஆலியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

எனக்காக வேண்டிக்கோங்க.! மருத்துவமனையில் இருந்து ஆலியா மானசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.! 1

விளம்பரம்

குறிப்பாக ஆலியாவின் பிள்ளைகளான ஐலா மற்றும் அர்ஷ் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த குழந்தைகளின் சேட்டைகளை அடிக்கடி வீடியோவாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஆலியா. மேலும் நடனமாடுவது, கணவருடன் இணைந்து விளாக் வீடியோக்கள் செய்வது என்று எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆலியா தற்போது நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இனியா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரசவத்திற்காக ராஜா ராணி சீசன் 2 வில் இருந்து விலகி இருந்தார் ஆலியா.

தொடர்புடையவை  பிரபுவை புதைத்து விட்டு வந்த கயல்.! வீட்டில் கயலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

எனக்காக வேண்டிக்கோங்க.! மருத்துவமனையில் இருந்து ஆலியா மானசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.! 3

விளம்பரம்

பிறகு உடல் எடை கூடியதால் அவரால் எந்த சீரியலிலும் கமிட்டாக முடியவில்லை.தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள ஆலியா மானஸா மீண்டும் புதிய சீரியல் கமிட் ஆகியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் சரிகம லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் இனியா என்கிற சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கால் உடைந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் வீடியோவை பகிர்ந்து, தனக்காக வேண்டிக்கொள்ளுமாறு பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆலியாவுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். Watch the below Video.!  

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment