துணிவு & வாரிசு இரண்டு படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படங்கள் பொங்கலுக்கு நேரடியாக மோத இருக்கின்றனது. விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படமும் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின்படி ஜனவரி 13ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துணிவு & வாரிசு இரண்டு படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.! 1

விளம்பரம்

விஜய் அஜித் படங்கள் வெளியாகும் தினம் தான் அவரது ரசிகர்களுக்கு பொங்கல் தீபாவளி எல்லாமே. இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகியிருந்ததால், இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாட இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் முடிவு செய்து இருந்தனர். இரண்டு பெரிய ரசிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் இந்த வருடம் பொங்கல் களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது முன்பதிவுகளும் தொடங்கிவிட்ட நிலையில் சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கட்டவுட் வைப்பது, பட்டாசு வெடித்து கொண்டாடுவது, பால் அபிஷேகம் பண்ணுவது என்று இன்றைக்கே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். மறுபக்கம் சிலர் கோயில் கோயிலாக படி ஏறி தங்களது நடிகர்களின் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று பேனர்களுடன் சென்று பிரார்த்தனைகளும் செய்து வந்தனர். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

தொடர்புடையவை  "ரத்தம் வடிய நிற்கும் அதர்வா..குருதி ஆட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு"!!

துணிவு & வாரிசு இரண்டு படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.! 3
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்கான சிறப்பு காட்சிகள் மற்றும் அதிகாலை காட்சிகளை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.! சில ரசிகர்கள் அரசின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment