ச்சீ..! இந்த மாதிரி பண்றதுக்கு உனக்கு வெக்கமா இல்ல..! பாக்கியவை அசிங்கப்படுத்திய கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பெயர் பலகையை எடுத்துவிட்டு பாக்கியலட்சுமி பெயர் பலகையை வைத்ததால் கோபி கோபத்துடன் உள்ளே வந்து பாக்யாவிடம் சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யா. இரண்டாவது மனைவி ராதிகா. முதல் மனைவி பாக்யாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார் கோபி. இனிமேல் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று பாக்யா கோபியை அடித்து விரட்டி அடித்து விட்டார். மேலும் வீடு கட்ட ஆன செலவான 40 லட்ச ரூபாயும் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கோபியிடம் சவால் விட்டிருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ச்சீ..! இந்த மாதிரி பண்றதுக்கு உனக்கு வெக்கமா இல்ல..! பாக்கியவை அசிங்கப்படுத்திய கோபி 1

விளம்பரம்

ஆனால் பாக்யாவால் அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை, திருமண ஆர்டர்களை எடுத்து இரண்டு தவணை மட்டுமே அவரால் செலுத்த முடித்தது. பின்னர் கேண்டீன் காண்ட்ராக்டை நம்பி இருந்த அவருக்கு, ராதிகா சதி செய்து அந்த காண்ட்ராக்ட் கிடைக்கும் விடாமல் செய்துவிட்டார். இதனால் குடும்ப வருமானத்திற்கு திண்டாடி வருகிறார் பாக்யா. இந்த நிலையில் அவரால் மீதி பணத்தை கொடுத்து வீட்டை தன்வசம் ஆக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று கொரியர் காரர் ஒருவர் வீட்டிற்கு வந்து கோபி இருக்கிறாரா என்று கேட்க, எழில் கோபி என்று யாரும் இங்கு இல்லை என்று திட்டி அனுப்பி விடுகிறார். பின்னர் வெளியில் இருக்கும் பெயர் பலகையை பார்த்த எழில் அதை பிடுங்கி எறிகிறார். அதை கவனித்துவிட்ட கோபி இது இன்னும் என்னுடைய வீடு தான் எப்படி என் பெயர் பலகையை பிடுங்கி எறியலாம் என்று எழிலிடம் சண்டை இடுகிறார்.

தொடர்புடையவை  என் ரசிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.! உருக்கமாக கடிதம் எழுதிய பிக்பாஸ் மணிகண்டன்.!

ச்சீ..! இந்த மாதிரி பண்றதுக்கு உனக்கு வெக்கமா இல்ல..! பாக்கியவை அசிங்கப்படுத்திய கோபி 3
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் எழில், கோபிநாத் என்கிற பெயர் பலகையை எடுத்துவிட்டு, பாக்கியலட்சுமி என்ற பெயர் பலகையை மாற்றுகிறார். இதை பார்த்தௌ மிகவும் டென்ஷன் ஆகி அந்தப் பெயர் பலகையை பிடுங்கி எறிந்து விட்டு வீட்டிற்குள் வந்து பாக்யாவிடம் கடுமையாக சண்டை போடுகிறார் கோபி. இந்த வீடு இன்னும் என் பெயரில் தான் இருக்கிறது. இரண்டு தவணைகள் மட்டுமே நீ பணம் செலுத்தி இருக்கிறாய். அதை ஞாபகம் வைத்துக் கொள் என்று பாக்யாவை மிகவும் அசிங்கப்படுத்தி திட்டுகிறார். இதனால் பாக்யா கூனி குறுகி நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment