துணிவு படம் ஓடிக் கொண்டிருந்தபோது வாரிசு படத்தில் இருந்து தீ தளபதி பாட்டு ஒளிபரப்பப்பட்டதால் ரசிகர்கள் டென்ஷன் ஆகி திரையின் மீது சிறப்புகளை வீசியிருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் படங்களும் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. விஜய் வாரிசு படத்திலும், அஜித் துணிவு படத்திலும் நடித்திருக்கின்றனர். இந்த இரண்டு படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படங்களுமே வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. முதல் ஒருநாள் வசூல் 25 கோடியை இரண்டு படங்களும் நெருங்கி இருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து துணிவு படமும், குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து வாரிசு படமும் எடுக்கப்பட்டிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜு தயாரித்திருந்தார். துணிவு படத்தை ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இரண்டு படங்களின் ட்ரெய்லர் வெளியாகி சுமார் 50 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிய நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படங்களும் நேரடியாக மோத இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் காத்திருந்தனர். ஆரம்பத்தில் சிறிது சுணக்கமாக சென்று கொண்டிருந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மேலும் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆங்காங்கே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மோதலும் நடந்து வருகிறது.

முதல் நாள் ரோகிணி தியேட்டரில் போலீசுக்கும் ரசிகர்களுக்கும் நடந்த மோதலில் பல ரசிகர்களுக்கு அடி விழுந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் துணிவு படத்தில் இடைவேளை காட்சியில் வாரிசு படத்தின் “தீ தளபதி” பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதனால் டென்ஷனான அஜித் ரசிகர்கள் கோபத்தில் செருப்புகளை கழட்டி திரையின் மீது வீசி தொடங்கினர். பின்பு போர்க்களமாக காட்சியளித்ததால் பதட்டமான சூழல் உருவாகியது. இதனால் உடனடியாக பாடல் நிறுத்தப்பட்டது. அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O