துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியாரின் மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மஞ்சுவாரியருக்கும் பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப் குமாருக்கும் பிறந்த மகள் தான் மீனாட்சி திலீப். கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மஞ்சு வாரியர். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும். இருந்தபோதிலும் இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தார். பின்னர் மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய அவர் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் சாட்சியம் என்கிற மலையாள படத்தில் முதன்முதலாக நடித்த தொடங்கினார். பின்னர் சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் இந்திய தேசிய பட சிறப்பு விருதையும், சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும், ஃபிலிம் சார் விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவர் 1998 ஆம் ஆண்டு பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1999 ஆம் ஆண்டு வரை நடித்த அவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தினார். 2014 ஆம் ஆண்டு வரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் பலப் படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அவர், தமிழில் முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு அசுரன் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே தனுசுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மஞ்சு வாரியர். அதன் பின்னர் அவர் இரண்டாவது படமாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.





துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தைரியமான ஒரு பெண்மணியாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். தற்போது மஞ்சுவாரியரின் மகளின் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. மஞ்சுவாரியரும் திலீப்பும் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து விட்டனர். தற்போது திலீப் நடிகை காவியா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று மஞ்சு வாரியர்க்கும் திலீப்புக்கும் பிறந்த மூத்த மகளான மீனாட்சி திலிப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை பார்த்த பலரும் இவர் மஞ்சுவாரியர் போல் அப்படியே இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.