சமுத்திர கனியின் அழகிய குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வெளியான குடும்ப புகைப்படம்.!

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் இருக்கும் சமுத்திரக்கனியின் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இன்று தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடிவரும் நிலையில் சமுத்திரகனியும் தனது வீட்டில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்த இவர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று இருக்கிறார். பின்னர் 1997 ஆம் ஆண்டு சுந்தர் கே விஜயன் என்னும் இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பின்னர் இவர் பாலச்சந்தரால் வேலைக்கு சேர்க்கப்பட்டு அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கே பாலச்சந்தரின் நூறாவது படமான பார்த்தாலே பரவசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

சமுத்திர கனியின் அழகிய குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வெளியான குடும்ப புகைப்படம்.! 1
பின்னாடி இவர் பாலச்சந்தர் இயக்கிய அண்ணி என்கிற சீரியலிலும் உதவியக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவர் இயக்கிய சில படங்கள் அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டு அவர் இயக்கிய நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் போராளி, நிமிர்ந்து நில், அப்பா என்ற பல வெற்றிப் படங்களை எடுத்தார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார். அப்பா படத்தில் அவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் அவதாரம் எடுத்தார். மேலும் பல படங்களில் அவர் சிறப்பு தோற்றத்திலும், வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் குறிப்பாக அவர் தனுஷின் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அவர் கடைசியாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த துணிவு படம் தற்போது மிகப் பெரிய வெற்றி அடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரபு தேவா கட்டி இருக்கும் பிரம்மாண்டமான வீடு.! வெளியான அழகிய Home Tour வீடியோ.!

சமுத்திர கனியின் அழகிய குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வெளியான குடும்ப புகைப்படம்.! 3

சமுத்திர கனியின் அழகிய குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வெளியான குடும்ப புகைப்படம்.! 5

விளம்பரம்

தற்போது சமுத்திரக்கனி உன்று பொங்கல் திருவிழாவை தனது குடும்பத்தினருடன் தனது வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அப்போது மனைவியும் மகன் மகள் என அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்கள் தங்களது குடும்பத்தை வெளியில் காட்டிக் கொள்வது அதிகம் விரும்புவதில்லை.

சமுத்திர கனியின் அழகிய குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? வெளியான குடும்ப புகைப்படம்.! 7

விளம்பரம்

அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்கிற காரணத்தினால் அவர்கள் இவ்வாறு செய்வதில்லை. இந்த நிலையில் முதன்முறையாக தற்போது சமுத்திரகனி தன்னுடைய குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment