வாரிசு படம் வெளியாகி இன்றுடன் ஏழு நாட்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், தற்போது படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. வாரிசு படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது 200 கோடி வசூலை கடந்து புதிய சாதனைப் படைத்து இருக்கிறது. வாரிசு திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் படுக்குழுவினருக்கு மிகப்பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் விஜய். இதில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி, நடிகர்கள் சரத்குமார், ஷாம், சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர். இதில் பேசிய இயக்குனர் வம்சி, வாரிசு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக உற்சாகமாக பேசி இருந்தார். தொடர்ந்து பொங்கல் விடுமுறை என்பதால் படத்திற்கான வசூல் அதிகரித்து தற்போது வசூல் விவரங்களை படக் குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கடந்த ஜனவரி பதினொன்றாம் தேதி அஜித்தின் துணிவு படத்துடன் நேரடியாக மோதியது வாரிசு திரைப்படம். முதல் நாளில் வாரிசு வசூலை பின்னுக்கு தள்ளி துணிவு தான் முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால் உலக அளவில் வசூலை ஒப்பிடும்போது வாரிசு படமே அதிகப்படியான வசூலை பெற்றிருந்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல வார இறுதி நாட்கள் என்பதாலும், பொங்கல் விடுமுறை வந்ததால் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மூன்று நாள் முடிவில் படம் 150 கோடி வசூலை பெற்றிருந்த நிலையில், தற்போது படம் ரிலீஸ் ஆகி 210 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஏழு நாட்களில் மூன்று மடங்காக திருப்பி கிடைத்துள்ளது நண்பா! என்று பதிவிட்டு அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறது.

பொங்கல் வின்னர் வாரிசா? துணிவா? என்று ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது துணிவு படம் வசூல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஆனால் வாரிசு படத்தின் வசூல் நிலவரங்கள் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருவதால் விஜய் ரசிகர்கள் மிக உற்சாகமாக இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரியல் பொங்கல் வின்னர் தளபதி தான் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். துணிவு படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தின் வசூல் குறித்து அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இதை புரிந்து கொண்டு விரைவில் துணிவு படத்தின் வசூல் நிலவரத்தை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Triple ah received your love in 7 days nanba 🔥#MegaBlockbusterVarisu crosses 210Crs+ collection worldwide 😎#VarisuHits210Crs#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/aVS6vGYhhY
— Sri Venkateswara Creations (@SVC_official) January 18, 2023