பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஏடிகே தற்போது முதல்முறையாக லைவ் வீடியோவிற்கு வந்துள்ளார். அதில் அவர் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி இன்றுடன் 101 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை மொத்தம் 16 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் 5 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. நேற்று பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் மூன்று லட்சத்துடன் கதிரவன் வெளியேறிவிட மீண்டும் இன்றும் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட ராப் பாடகர் ஏடிகே வைவ்வுக்கு வந்திருக்கிறார். அதில் அவர் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பற்றியும் தற்போது அவர் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் தான் பிக்பாஸில் கலந்து கொண்டதே ஒரு எதிர்பாராத நிகழ்வு. என்னுடைய திறமையை வெளிக்காட்டும் ஒரு களமாக பிக் பாஸ் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி என்று கூறினார். மேலும் உங்களுடைய பேவரைட் யார் என்று கேட்ட போது விக்ரமன், அசீம், ராம், மணி ஆகியோர் பெயரை குறிப்பிட்டார். அசீம் மீது என்னதான் கோவம் இருந்தாலும், நாளின் இறுதியில் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நாங்கள் பகையை மறந்து பேசிக் கொள்வோம், விக்ரமன் ஒரு லாஜிக் திங்கிங் பர்சன், டிசிப்ளினான ஒரு ஆள், மேலும் அவருடைய மேனரிசம், அடுத்தவர்களை மதிக்கும் தன்மை ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் ராம், மணி இருவரும் ஜென்யூன் பிளேயர்ஸ். வீட்டில் வந்தது முதலே இவர்கள் அனைவரிடத்திலும் எனக்கு ஒரு நட்பு இருந்தது. எனக்கு பிடிக்காத ஒரு நபர் என்று சொன்னால் அது தனலட்சுமி தான். வயதுக்கு மீறிய அடுத்தவர்களை எடுத்து எறிந்து பேசுவதால் எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. மேலும் பிறரை தாழ்த்தியும் பேசுவார். அதனாலேயே அவருடன் எனக்கு ஒரு தனிப்பட்ட உறவு இல்லாமலே போய்விட்டது என்று தனலட்சுமி குறித்தும் பேசினார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு உள்ளே வந்தபோது ஒரு அசாதாரண சூழ்நிலை எழுந்திருக்கிறது. அதனால் விளையாட்டை நன்றாக விளையாட முடியவில்லை. ஒரு நெகட்டிவிட்டி உருவாகி இருக்கிறது. அதனால் தான் கதிர் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறான். அவர் பணத்தை எடுத்துக் கொண்டதை பாசிட்டிவாக பார்த்தால் அவருக்கு பணம் ஒரு பிரச்சனை இல்லை, நிம்மதி தான் முக்கியம். அதனால் தான் அவர் பணம் ஏறுவதற்கு முன்பே மூன்று லட்சம் போதும் வெளியேறி இருக்கிறார். மேலும் தலை முடியை எடுத்தது குறித்து கேட்ட கேள்விக்கு, நான் கொடுத்த சேலஞ்சுக்கு உண்மையாக இருந்தேன். அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்திய போதும், அதை தாங்கிக் கொண்டு இருந்தேன் என்று பேசினார். மேலும் அடுத்தபடியாக தனக்கு கொடுக்கப்பட்ட ஊர்க் கிழவி என்ற பட்டத்தை வைத்து பாடல் தயாரித்து கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியிடப்படும் என்று பேசினார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O