இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவள் நான் இல்ல.! ஆவேசமான வனிதா விஜயகுமார்.!

தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தற்போது வனிதா பகிர்ந்திருக்கும் பகிர்வு இணையத்தில் பெரும்பளவில் டிரெண்டாகி வருகிறது. எங்கே அரசியல் செய்யணுமோ? அங்கே போய் செய்யுங்கள் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால் எங்களுடைய பொழுதுபோக்கு தொழிலை தொழிலில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என்றும் வனிதா காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 3 இன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார். இவர் இதற்கு முன்பே அவரது தந்தை விஜயகுமார் மற்றும் தாய் மஞ்சுளாவுடன் சண்டையிட்டு மிகப் பிரபலமானவர். குடும்ப சண்டையை வீதிக்கு கொண்டு வந்ததால் வனிதாவை அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒதுக்கி வைத்து விட்டனர். அவரது தங்கைகள் கூட அவரிடம் பேசுவதில்லை. எனவே தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா. மேலும் பிக்பாஸ்க்கு பின்னர் வனிதா பலராலும் அறியப்பட்டார். தற்போது பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்து தனியார் youtube சேனல்களில் பேட்டிகள் அளித்து வருகிறார்.

தொடர்புடையவை  என்ன தப்பா சித்தரிக்காதீங்க என கமலை எதிர்த்து திமிராக பேசிய ஆயிஷா.! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.!

இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவள் நான் இல்ல.! ஆவேசமான வனிதா விஜயகுமார்.! 1

விளம்பரம்

ஆரம்பம் முதலே வனிதா அசீமை ஆதரித்தும், விக்ரமனை எதிர்த்தும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது விக்ரமனுக்கு ஆதரவளித்து திருமாவளவன் பகிர்ந்த ட்வீட்டை மிக கடுமையாக விமர்சித்து இருந்தார் வனிதா. இதெல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். மரியாதைக்குரிய அரசியல் தலைவராகவும், ஒரு எம்பி பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோல் ரியாலிட்டி ஷோவில் பங்கெடுத்த தனது கட்சிக்காரருக்கு வாக்கு சேகரிப்பது சரியான முறை தானா என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு இணையத்தில் வேகமாக டிரெண்டாகத் தொடங்கியது. வனிதாவை பலரும் விமர்சிக்க தொடங்கினர். வனிதா அசீமடம் பணம் பெற்றுக்கொண்டு, அவரது PR டீமிற்காக இவ்வாறு விக்ரமனை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருவதாக கண்டனங்களும் எழுந்து வந்தது. தற்போது ஒரு படி மேலே போய் வனிதாவிற்கு தற்போது கொலை மிரட்டல்களும் வரத் தொடங்கி இருக்கிறது. இதை வனிதாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருக்கிறார்.

இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவள் நான் இல்ல.! ஆவேசமான வனிதா விஜயகுமார்.! 3

விளம்பரம்

அதில் அவர் நான் பேசிய யூடியூப் சேனலுக்கு போன் கால் செய்து எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. யாருக்கும் எதற்கும் பயந்தவள் நான் இல்லை, உங்கள் அரசியல் புத்தி என்னவென்று காலம் காலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நேர்மையாக மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்கள். உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க என்று பதிவிட்டு இருக்கிறார் பின்னர் ஒரு பிக்பாஸ் ஜெயிக்கிறதுக்கே எவ்வளவு அராஜகம் என்றால் தேர்தல் வரும்போது என்னெல்லாம் செய்வாங்க இவங்கள மாதிரி அரசியல் கட்சிகள். உங்கள் அரசியலை எங்கு செய்ய வேண்டுமோ அங்கு செய்து கொள்ளுங்கள், நான் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால் எங்கள் பொழுதுபோக்கு தொழிலில் உங்கள் அரசியலை செய்யாதீர்கள் என்றும் அவர் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment