பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ராதிகா? அவர் போட்ட வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருக்கும் செய்தி இணையத்தில் வேகமாக பரவி இருக்கிறது. பாக்கிய லட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோவும் பதிவும் வைத்து நெட்டிசன்கள் இந்த தகவலை பரப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தவர் ரேஷ்மா. பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற தொடரின் மூலமாகத்தான் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவருடைய தந்தை பிரசாத் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆவார். தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் ரேஷ்மா மிகப் பிரபலமானார். இதுவே அவருடைய முதல் படமாகும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ராதிகா? அவர் போட்ட வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்.! 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பையும் பெற்றார். பின்னர் அவருக்கு பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அவருடைய கதையை கேட்ட பலரும் கலங்கி அழுதிருந்தனர். அமெரிக்காவில் இருந்த ஒன்பது மாத கர்ப்பமாக இருந்தபோது பிரசவ வலி வந்து விட்டது. அப்போது காரை எடுத்துக்கொண்டு ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோதே குழந்தை வெளியில் வர ஆரம்பித்து விட்டது. பின்னர் நானே மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி கடைசியில் அந்த குழந்தை இறந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் அந்த குழந்தையை புதைத்த இடத்திற்கு அமெரிக்காவிற்கு சென்று வருவதாக பேசி இருந்தார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்து இருக்கும் ரேஷ்மாவிற்கு தற்போது மிக பெரிய சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ராதிகாவாக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  அமீருக்கு ஜோடியாக ஆடிய கேபி..டேனியுடன் கைகோர்த்த பாவனி..ஜோடிகளில் மாற்றமா?

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ராதிகா? அவர் போட்ட வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று காலை முதலே ரேஷ்மா சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவருக்கு வேறு ஒரு சேனலில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ரேஷ்மா எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இந்தக் கப்பல், நட்பு, கதைகள், படப்பிடிப்பில் நாங்கள் ஒன்றாகச் செலவழிக்கும் அழகான மற்றும் கடினமான நாட்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும், உங்களிடம் உள்ளதெல்லாம் அனைவருக்கும் அன்பைக் கொடுக்கும்போது எதுவும் முக்கியமில்லை. நாங்கள் அனைவரும் விழித்தெழுந்து ஒரு நல்ல நாளைக் கொண்டாட விரும்புகிறோம், உங்களுக்குப் பிடித்த சிலருடன் இருக்கும்போது அது மறக்கமுடியாததாகிவிடும் என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. ரேஷ்மா அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். Watch the below Video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment