பிக்பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.!

பிக் பாஸ் சீசன் 6ல் தற்போது வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி இன்றுடன் 15 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது மூன்று போட்டியாளர்களுடன் நிறைவடைந்து இருக்கிறது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இறுதி மேடைக்கு மூன்று போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கின்றனர். அதில் ஷிவின் மூன்றாவது இடத்தையும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், அசீம் முதலிடத்தையும் பிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக விளையாடி வந்தார் அசீம். முதலில் வரிசைப்படி நிற்க வைக்கும் டாஸ்கிலேயே அசீம் தனது சண்டையை ஆரம்பித்தார். சக போட்டியாளர்களை ஒருமையில் பேசுவதும், பெண் போட்டியாளர்களை வாடி போடி என்று பேசுவதுமாக கன்டென்ட் கொடுக்க ஆரம்பித்தார்.

பிக்பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! 1
அதற்குப் பின்னர் தொடர்ந்து அமுதவாணன், விக்ரமன், ஜனனி, ஏடிகே என்று அனைவரிடமும் சண்டை போட்டு வந்தார். இது ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நெருக்கடியை கொடுத்தது. பலரும் கமலுக்கு அசீமை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. கமல் அவ்வாறு செய்யவில்லை. பிக்பாஸ் குழுவினரும் அவ்வாறு செய்யவில்லை. சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக நடத்தும் ஒருவர் தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று இணையத்திலும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு மக்களின் ஆதரவும் இருந்து வந்தது. மக்கள் பலரும் அவரை எப்போதும் வாக்களித்து காப்பாற்றயே வந்தனர். குறிப்பாக எப்பொழுது நாமினேஷனில் வந்தாலும் முதல் இடத்தில் காப்பாற்றப்பட்டு வந்தார் அசீம். கிட்டத்தட்ட 15 வாரங்களாக நாமினேட் செய்யப்பட்ட போதிலும் அனைத்திலும் முன்னேறி முன்னிலைக்கு வந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பணம் கொடுக்க வந்த பழனிசாமி.! ஒற்றை வார்த்தையால் ஆஃப் செய்த பாக்யா.! ப்ரோமோ இதோ

பிக்பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! 3

பிக்பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! 5

விளம்பரம்

இந்த நிலையில் அவர்தான் வின்னர் ஆவார் என்று பல கருத்துக்கள் உலவி வந்த நிலையில், தற்போது அது குறித்து தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஷிவின் மூன்றாவது இடத்தையும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், அசீம் முதலிடத்தையும் பிடித்து டைட்டில் வின்னர் ஆகவும் ஆகி இருக்கிறார். இதனால் அசீமின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அசீமுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment