உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..!

நேற்று மாலை தொடங்கி இன்றளவும் ஓயாத சர்ச்சையாக இருக்கிறது பிக்பாஸ்-இன் டைட்டில் வின்னர் முடிவுகள். இதில் அசீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பிக்பாஸ் ரசிகர்கள் விஜய் டிவிக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களைக் கடந்து நேற்று மாலை உடன் முடிவடைந்திருந்தது. ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சிகள் என களைக்கட்டி இருந்த இந்த இறுதி நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களான குயின்சி, மணிகண்டன், ஜிபி முத்து, தனலட்சுமி, ரட்சிதா போன்ற பலரும் நடனம் ஆடி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக ஆக்கினார்கள். மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நீடித்தது. இதில் யார் வெற்றி பெறுவார்? என்று ஆர்வம் கடந்த ஒரு வாரமாகவே பிக்பாஸ் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் எடுக்கப்படும் வாக்கெடுப்பில் அசீமே முன்னிலை வகித்து வந்தார்.

உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 1
இதனால் அசீம் டைட்டில் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. இருந்த போதிலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட முறையில் அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று வெளியில் கணிக்கப்பட்டது. மேலும் விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என்றும், “அறம் வெல்லும்” என்று விக்ரமன் கூறும் வார்த்தைகளும் ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கியது. இதையடுத்து விக்ரமன் தான் டைட்டிலை ஜெயிக்கப் போகிறார் என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அசீமுக்கு டைட்டில் வழங்கப்பட்டது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராகவும் பிக்பாஸ் எதிராகவும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். சகப் போட்டியாளர்களை மனிதரை மனிதனாக மதிக்கத் தெரியாத ஒருவரை வெற்றி பெற வைத்து விஜய் டிவி மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக விட்டு நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ராஜா ராணி 2 சீரியல் நடிகைக்கு நடந்த திருமணம்..! வெளியான திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ.!

உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 3 உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 5 உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 7 உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 9 உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 11 உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 13 உண்மையான டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விக்ரமன்..! 15

மேலும் அசீம் வெற்றி கோப்பையை தனியாக உயர்த்தி காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, விக்ரமன் தோளில் கை போட்டுக் கொண்டு கமலஹாசன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஒருவர், இது ஒன்றே போதும் கமல் குறிப்பால் உணர்த்துகிறார் விக்ரமம் தான் உண்மையான வெற்றியாளர் என்று, மேலும் தானே நேராக ட்ராஃபியை கொடுக்காமல் விக்ரமனை வைத்து அசீமிற்கு கமல் வழங்கினார். இதுவே குறிப்பாக உணர்த்துகிறது, சில நிர்பந்தங்களினால் தான் அசீம் வெற்றி பெற வைக்கப்பட்டார் என்று இணைய நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விஜய் டிவி எடுத்த முடிவு மிகவும் தவறானது, மிகப்பெரிய தவறு இது செய்து விட்டது என்றும், #RipVijayTv #BoycottVijayTV போன்ற ஹேஷ்டேக்குகளை பறக்க விட்டு வருகின்றனர். மேலும் விக்ரமன் மற்றும் ஷிவினின் புகைப்படங்களை பகிர்ந்து உண்மையாக விளையாடிய உங்களை வெற்றி பெறச் வைக்க முடியவில்லை. உங்களிடம் மனமார மன்னிப்பு கேட்கிறோம் என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

 

தொடர்புடையவை  ராதிகா வீட்டிற்கு நேராக சென்று கோபியை பங்கமாக கலாய்த்து தள்ளிய ராமமூர்த்தி.!

மேலும் பலர் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பக்கங்களான ட்விட்டர் பக்கங்கள் மற்றும் youtube பக்கங்களை பின் தொடர்வதை அன்பாஃலோ செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கின்றனர். விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ஆப்பான டிஸ்னி ஹாட்ஸ்டாரை அன்இன்ஸ்டால் செய்து விட்டதாகவும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது வரை ட்விட்டரில் ஹாட் டாபிக்காகவும் முதலிடத்திலும் இருக்கிறது பைக்காட் விஜய் டிவி, தோழர் விக்ரமன் போன்ற ஹேஷ்டேக்குகள்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment