வாரிசு படம் மெகா ப்ளாக் பஸ்டர் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பதினோராவது நாள் முடிவில் எவ்வளவு ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் அறிவித்திருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் 66-வது படமாக உருவாகியிருந்தது வாரிசு திரைப்படம். இந்த திரைப்படம் குடும்பம் சார்ந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ஆக்ஷன் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வந்த தளபதி சற்று வித்தியாசமாக குடும்ப பங்கான கதைகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்திருந்தார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் வாய்ப்பை இசையமைப்பாளர் தமன் பெற்றிருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட் அடித்து இருந்தது.

குறிப்பாக ரஞ்சிதமே பாடலும், தீ தளபதி பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பே டீசர், ட்ரைலர் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. படம் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நாள் தொடங்கி பலரும் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதேபோல் படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி துணிவு படத்துடன் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தல அஜித்தின் துணிவு படத்துடன் தளபதியின் வாரிசு படம் நேரடியாக மோதியிருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. படம் வெளியான முதல் நாளே தமிழகத்தில் மட்டும் சுமார் 17 கோடி வசூலை பெற்றிருந்ததாக தகவல் பரவிய நிலையில், 7வது நாள் முடிவில் படம் சுமார் 210 கோடியை தாண்டியதாக படக்குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

வாரிசு படத்தை குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் பார்த்து செல்வதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 11 வது நாள் முடிவில் படம் 250 கோடிக்கும் அதிகமான வசூலை உலக அளவில் பெற்றிருப்பதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். தளபதி விஜயும் இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சக்சஸ் மீட்டில் கேக் வெட்டி படக்குழுவினருடன் விஜய் கொண்டாடியிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. 250 கோடி வசூலை குவித்ததால் விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் லோகேஷ் கனகராஜூ உடன் இணைந்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Podra bgm ah 🔥#MegaBlockbusterVarisu collects 250Crs+ worldwide in 11 days nanba 🤩#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @TSeries #Varisu #VarisuPongal#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ
— Sri Venkateswara Creations (@SVC_official) January 23, 2023