இது தப்பான முன்னுதாரணம், அசீமுக்கு கொடுக்க கமலுக்கே விருப்பம் இல்லை.! விளாசும் VJ மகேஸ்வரி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அது குறித்து மகேஸ்வரி சில பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் அந்த பதிவை முதல் இடத்தில் இருக்குமாறு அவர் பின் செய்து வைத்திருக்கிறார். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ். இது தமிழில் 5 சீசன்களை முடித்து கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது. மூன்று மாதங்களாக நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இறுதியாக விக்ரமன், அசீம், ஷிவின் என மூவர் மட்டுமே இறுதி போட்டியில் இருந்தனர். இதில் ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரில் ஒருவர்தான் டைட்டில் வெல்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக டைட்டிலைத் தூக்கி இருந்தார் அசீம். அசீமின் இந்த வெற்றி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதற்கான காரணம் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது செய்த நடவடிக்கைகள் தான்.

தொடர்புடையவை  23 வருடங்களுக்கு பிறகு K.S.ரவிகுமாரிடம் நீலாம்பரி போல நடித்து காட்டிய ரம்யா கிருஷ்ணன் | RamyaKrishnan

இது தப்பான முன்னுதாரணம், அசீமுக்கு கொடுக்க கமலுக்கே விருப்பம் இல்லை.! விளாசும் VJ மகேஸ்வரி..! 1

விளம்பரம்

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்த விக்ரமன், அமுதவாணன், தனலட்சுமி, ஷிவின், மைனா, ஏடிகே, மகேஸ்வரி, ஆயிஷா, ஜனனி உள்ளிட்ட பலருடன் முரண்பட்டு நின்றார் அசீம். அனைவரிடமும் சண்டை போட்டு அனைவரையும் ஒருமையில் பேசி சற்று முரட்டுத்தனமாகவே விளையாடி வந்தார். குறிப்பாக சக போட்டியாளர்களை ஒருமையில் பேசுவதும், மரியாதை இல்லாமல் பேசுவதும், பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. இருந்தபோதிலும் அசீமிற்கு வெளியில் மக்களின் ஆதரவை இருக்கவே செய்தது. அதனால் தான் அவர் 11 முறை நாமினேட் செய்யப்படும் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டுக் கொண்டே வந்தார். இறுதியில் அவருக்கே அந்த கோப்பையும் கிடைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் பிக்பாஸிற்கு எதிராகவும், விஜய் டிவிக்கு எதிராகவும், கமலஹாசனை திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுபோல் விளையாடினால் ஜெயித்து விடலாம் என்ற தவறான முன்னுதாரத்தை விஜய் டிவி ஏற்படுத்தி விட்டதாகவும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

இது தப்பான முன்னுதாரணம், அசீமுக்கு கொடுக்க கமலுக்கே விருப்பம் இல்லை.! விளாசும் VJ மகேஸ்வரி..! 3

விளம்பரம்

இது தப்பான முன்னுதாரணம், அசீமுக்கு கொடுக்க கமலுக்கே விருப்பம் இல்லை.! விளாசும் VJ மகேஸ்வரி..! 5

 

விளம்பரம்

தொடர்ந்து #BoycottVijayTv #RIPVijayTv போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சீசன் 6 போட்டியாளராக இருந்த விஜே மகேஸ்வரி தற்போது அசீம் குறித்த சில பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். அதில் இந்தியா டுடே பக்கம், “அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்றது தவறான முன்னுதாரணம்” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையை ஷேர் செய்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்து வைத்திருக்கிறார் விஜே மகேஸ்வரி. மேலும் அசீமிற்கு எதிராக வரும் அனைத்து பதிவுகளையும் விஜே மகேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். மேலும் கனத்த இதயத்துடன் தான் இந்த கோப்பையை அசீமிற்கு கமலஹாசன் கொடுத்திருப்பார் என்று கமல் விக்ரமிடம் நெருங்கி நிற்கும் புகைப்படத்துடன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த மகேஸ்வரி இது உண்மை என்று பகிர்ந்து இருக்கிறார்.

தொடர்புடையவை  விக்ரமை 'கரப்பான் பூச்சி' என அழைத்த மாயா.! கண்டித்த கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் மாயா.!

இது தப்பான முன்னுதாரணம், அசீமுக்கு கொடுக்க கமலுக்கே விருப்பம் இல்லை.! விளாசும் VJ மகேஸ்வரி..! 7

விளம்பரம்

இது தப்பான முன்னுதாரணம், அசீமுக்கு கொடுக்க கமலுக்கே விருப்பம் இல்லை.! விளாசும் VJ மகேஸ்வரி..! 9
மகேஸ்வரிக்கும் அசீமிற்கும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபொழுது சண்டை சச்சரவாக தான் இருக்கும். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், மீண்டும் உள்ளே வந்த பின்பும் மகேஸ்வரியும் அசீமும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர். அசீம் பற்றி கூறும் பொழுது தன்னை மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். அதை தனது மகன் பார்த்துவிட்டு என்னிடம் கேட்டான், இது போன்ற போட்டியாளர்கள் ஜெயிக்கவே கூடாது என்று விக்ரமனிடம் கண்ணீர் மல்க மகேஸ்வரி பேசிய காணொளிகள் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் அசீம் வெற்றி பெற்றது மகேஸ்வரிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் அசீம் குறித்த ட்விட்டர் பதிவுகளை அவர் தொடர்ந்து தனது பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

விளம்பரம்

Leave a Comment