ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சினேகா.! வீடியோ இதோ..!

நடிகை சினேகா தனது மகள் ஆதிந்த்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு சென்று அந்த குழந்தைகளுடன் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவரது மகள் ஆதிந்த்யாவும் ஆதரவற்ற குழந்தைகளை பார்த்தவுடன் துள்ளி குதித்து அவர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோ பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும், இன்னும் அப்படியே இளமையுடன் இருந்து வருகிறார்கள். இதனாலையே இந்த ஜோடிகளை பலருக்கும் பிடித்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து, அதே ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சினேகா.! வீடியோ இதோ..! 1

விளம்பரம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சினேகா.! வீடியோ இதோ..! 3

காதல் திருமணத்திற்கு சாட்சியாகவும் அழகிய குடும்பத்திற்கு உதாரணமாகவும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கிறது. முதல் மகன் பெயர் விஹான், இரண்டாவது மகள் பெயர் ஆதிந்த்யா. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் தொடர்ந்து ஏதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று இருந்த அவர்கள் புத்தாண்டை வெளிநாட்டிலிருந்து கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவேற்றி இருந்தனர். மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது மாடுகளுக்கு பொங்கல் படைத்து அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றி இருந்தனர். மேலும் இருவரும் சேர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது, ஹோட்டலுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு செல்வது என்று தொடர்ந்து அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சாண்டியுடன் இணைந்து கமல் போலவே குத்தாட்டம் போட்ட சிம்பு | Vikram

ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சினேகா.! வீடியோ இதோ..! 5

ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சினேகா.! வீடியோ இதோ..! 7

விளம்பரம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சினேகா.! வீடியோ இதோ..! 9

இந்த நிலையில் சினேகாவின் இளைய மகளான ஆதிந்த்யாவுக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த சினேகா, என் வாழ்வின் அர்த்தத்தை கற்றுத் தந்தவள் நீதான் என்று பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சினேகா. அதில் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்குச் சென்ற அவர், தனது மகளை அந்த குழந்தைகளுடன் விளையாட விட்டும், டான்ஸ் ஆட விட்டும் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். பின்னர் கேக் வெட்டியும் அந்த குழந்தைகளுடன் அமர்ந்து உணவுகள் அருந்த வைக்கும் தனது மகளுக்கு நல்ல ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் சினேகா. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வது போல் சினேகாவின் மகளும் எந்த வேறுபாடும் பார்க்காமல் அந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடியும், அவர்களை கொஞ்சியும் மகிழ்ந்திருக்கிறார். மேலும் அவர்கள் அனைவருக்கும் புது உடை வழங்கியும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  சிவாங்கி உன் எல்லா வீடியோ பாத்து இருக்கேன் நீ ஒரு எனர்ஜி பூஸ்டர்.! சிவாங்கியை பாராட்டிய ஸ்ரேயா கோஷல்.!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment