என் புள்ளைய என்னடா பண்ணீங்க? ஏழை தந்தையின் கண்ணீரின் வலிகளை உணர்த்தும் “பொம்மை நாயகி”

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை நாயகி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது இந்த படத்தின் டிரைலர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக இருந்து வந்தார். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்தார். தற்போது காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துக் முடித்திருக்கிறார் யோகி பாபு. அந்த வகையில் தற்போது யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

என் புள்ளைய என்னடா பண்ணீங்க? ஏழை தந்தையின் கண்ணீரின் வலிகளை உணர்த்தும் "பொம்மை நாயகி" 1
யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கதாநாயகனாக பொம்மை நாயகி படத்தில் ஒரு தந்தை கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார். இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது ஒரு எளிய குடும்பத்தில் இருக்கும் ஒரு தந்தை தனது மகளுக்கு நடக்கும் அநீதிக்காக உயிரை கொடுத்து போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுதே மனம் ஒருகணம் உருகி விடுகிறது. அந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. இந்த படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி தமிழ்நாடு எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளோம் - சைந்தவியை பிரிந்தது குறித்து ஜிவி பிரகாஷ்.!

என் புள்ளைய என்னடா பண்ணீங்க? ஏழை தந்தையின் கண்ணீரின் வலிகளை உணர்த்தும் "பொம்மை நாயகி" 3
இந்தப் படத்தை இயக்குனர் ஷான் இயக்கியிருக்கிறார், சுந்தரமூர்த்தி இதற்கு இசையமைத்திருக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மிகவும் எதார்த்தமான, ஒரு எளிய குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு நடிக்கும் அநீதியை கண்டு பொங்கி எனும் தந்தையாக இந்த படம், யோகி பாபுவின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Think Music India.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment