பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருப்பதாகவும், அவருக்கு பதில் இணையத்தில் சர்ச்சையான நடிகை வனிதா நடிக்க இருப்பதாக தகவல் தீயாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தவர் ரேஷ்மா. பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற தொடரின் மூலமாகத்தான் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவருடைய தந்தை பிரசாத் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆவார். தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் ரேஷ்மா மிகப் பிரபலமானார். இதுவே அவருடைய முதல் படமாகும்.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பையும் பெற்றார். பின்னர் அவருக்கு பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்து இருக்கும் ரேஷ்மாவிற்கு தற்போது மிக பெரிய சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ராதிகாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களாக ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவருக்கு வேறு ஒரு சேனலில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ரேஷ்மா எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

அதில் ரேஷ்மா இந்த அழகான நினைவுகளுக்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார். இதனால் அவர் சீரியலை விட்டு விரைவில் வெளியேற இருப்பதாக தகவல் வேகமாக பரவியது. மேலும் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீதாராமன் சீரியலில் நடிக்க இருக்கும் தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் ராதிகா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் சின்னத்திரையில் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரேஷ்மாவும் வனிதாவும் நெருங்கிய தோழிகள் என்பதால் வனிதாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ராதிகாவும் சீரியலை விட்டு விலக இருப்பதாக உறுதியாக அறிவிக்கவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the Video Below.!