ஏய் கோபி, என்கிட்டயே கேள்வி கேக்குறியா? திடீரென நீயா நானா கோபிநாத்தை திட்டிய பெண்ணால் பரபரப்பு.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீயா நானா? இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். இவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா ஷோ இன்றுவரை பிரபலமாக இருக்கிறது. எதிரும் புதிருமாக இருக்கும் இரு தரப்பினரை அழைத்து அவர்களிடம் கேள்வி கேட்டு இரு தரப்பினரையும் கருத்தையும் பெற்று மிக நேர்த்தியாக ஒரு நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். இவர் தனியார் வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் வேலைக்காக வந்தார். ஆங்கிலம் அவ்வளவு கலக்காமல் தூய தமிழில் உரை நிகழ்த்தும் ஆற்றல் படைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் கோபிநாத் ஒருவராக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏய் கோபி, என்கிட்டயே கேள்வி கேக்குறியா? திடீரென நீயா நானா கோபிநாத்தை திட்டிய பெண்ணால் பரபரப்பு.! 1

விளம்பரம்

விஜய் டிவி துவங்கப்பட்ட போது, அதில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டது. அதில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். முன்பாக அவர் பல தொலைக்காட்சிகளில் வேலை பார்த்திருக்கிறார். அவருக்கு திருப்புமுனையாக இருந்த ஒரு நிகழ்ச்சி என்றால் குற்றம் நடந்தது என்ன நிகழ்ச்சி தான். இதில் ஒரு குற்றம் நடந்து விட்டால் அதை புலனாய்வு செய்து அந்த குற்றத்தின் உண்மை தன்மையை கண்டுபிடிப்பது போன்ற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் பெரிதும் அறியப்பட்டார். மேலும் இவர் ஐந்து புத்தகங்களை எழுதி இருக்கிறார். தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, நேர் நேர் தேமா போன்ற ஐந்து புத்தகங்கள் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.

தொடர்புடையவை  "கோமதியிடம் மன்னிப்பு கேட்ட பாக்யா.!" 'பாக்கியலட்சுமி' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மகா சங்கமம் ப்ரோமோ இதோ.!

ஏய் கோபி, என்கிட்டயே கேள்வி கேக்குறியா? திடீரென நீயா நானா கோபிநாத்தை திட்டிய பெண்ணால் பரபரப்பு.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் 90களில் நாடகங்களில் நடித்த நடிகர்களும், தற்போது நடிக்கும் சின்னத்திரை நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இரு தரப்பும் கோபமாக நடித்து காட்டிக்கொண்டிருந்தனர். அப்போது நடிகை ஒருவர் ஏய் கோபி என்னிடமே கேள்வி கேட்கிறாயா? என்று கேட்டார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் உதாரணத்திற்கு சொல்கிறேன் என்ற பெயரில் கோபியையே இப்படி மரியாதை இல்லாமல் பேசி விட்டீர்களே என்று தங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment