புலிக்கு பிறந்தது பூனையாகுமா? முதல் படத்தை இயக்கும் தளபதி மகன் ஜேசன் ஜோசப் விஜய்.! வீடியோ இதோ .!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஜேசன் இயக்கும் குறும்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் குறும்படம் இயக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் ஆரம்பத்தில் தனது தந்தையுடன் இணைந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார் 1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய அவர், பின்னர் அவர் 1992 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்திருந்த போதிலும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது பூவே உனக்காகத்தான். இந்த படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது அந்த படத்திற்கு பின்னர் விஜய் மிகப்பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 66 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? முதல் படத்தை இயக்கும் தளபதி மகன் ஜேசன் ஜோசப் விஜய்.! வீடியோ இதோ .! 1
சிறிது காலம் சாக்லேட் பாயாக காதல் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து வந்த அவர் பின்னாளில் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். குறிப்பாக துப்பாக்கி படத்திற்கு பின்னர் அவர் முழுவதுமாக ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். தலைவா, ஜில்லா, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் போன்ற பல படங்களில் அவர் ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் வெற்றி படங்களாக இருந்திருக்கிறது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் தற்போது 66வது படமாக வாரிசு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதை தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. படம் வெளியாகி பதினாறு நாட்களில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான வசூலை குறித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் "பேட் ஆஸ்" வெளியானது.!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? முதல் படத்தை இயக்கும் தளபதி மகன் ஜேசன் ஜோசப் விஜய்.! வீடியோ இதோ .! 3
இந்த நிலையில் தற்போது தளபதி தனது 67வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த சமயத்தில் தளபதியின் மகன் சஞ்ச் ஜேசன் விஜய்யும் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் உடன் சேர்ந்து வேட்டைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் பாடல்களில் தோன்றியிருக்கிறார். அவரது மகள் திவ்யா தெறி படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சஞ்சய் ஜேசன் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சினிமா எடுப்பது குறித்து படித்து வருகிறார். அவரது நண்பர்களுடன் ஒரு குறும்படம் எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே 2020இல் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப் போவதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் அது குறித்து எந்த தகவலும் அதன் பின்னர் வெளியாகவில்லை. இந்த நிலையில் தாத்தாவைப் போலவே பேரனும் இயக்குனர் அவதாரம் எடுத்து இருப்பதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  லைலாவுடன் சேர்ந்து கண்ணாலே மையா மையா பாடலுக்கு ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment