பிரபல இயக்குனர் அட்லீ தனக்கு மகன் பிறந்து இருக்கும் செய்தியை சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். பெற்றோரின் புதிய அற்புதமானபயணம் இன்று தொடங்குகிறது! என்று பதிவிட்டுள்ளார். தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் “ராஜா ராணி”. இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் முதல் படத்தை இயக்கி வெற்றியை கண்டவர். தொடர் வெற்றி படங்கள் விஜய்க்கு கொடுத்து, அவருடைய ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப் போன இயக்குனராக மாறிப் போனார். மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்து சன் பிக்சரஸ் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா என பலர் நடிக்க வெளியானது “பிகில்” படம்.

ஆனால் இந்த படம் விமர்சகர்களிடம் இது பயங்கர காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்று விமர்சிக்க பட்டாலும் மீண்டும் விஜயுடைய அதிக கலெக்ஷன் செய்த படமாக இது உருவெடுத்து. கிட்டத்தட்ட 300 கோடி வசூலை வாரி குவித்தது இந்த படம்.இப்பொது பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஜவான் படத்தில் பணிபுரிந்து வருகிறார். எவ்ளோ விமர்சனனால் வைக்கப்பட்டாலும் இன்று இந்திய அளவில் மிக முக்கிய நடிகரை கொண்டு மிக முக்கிய படத்தை எடுத்து வருகிறார் அட்லீ. இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியா சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார் அட்லீ. அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அட்லீயும் ப்ரியாவும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியா கர்ப்பமாகி இருந்தார்.

கர்ப்பமாக இருந்த போது நடந்த போட்டோஷூட் புகைப்படங்களை பிரியா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் தளபதி விஜயே நேரடியாக கலந்து கொண்டார். இந்த நிலையில் அட்லீ மற்றும் பிரியா தம்பதிகளுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ள அவர்கள், நீங்கள் சொல்வது சரிதான், இப்படி ஒரு உணர்வு உலகில் வேறேதும் இல்லை எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது, பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது! நன்றியுடன். சந்தோஷமாக. பாக்கியம். என்று பதிவிட்டு உள்ளனர். அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிகளுக்கு அவர்களது ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
