முதல் ஆல்பம் பாடலை வெளியிட்ட AR ரஹ்மான் மகன் ARR அமீன்.! குரல் அப்படியே அப்பா மாதிரியே இருக்கே.!

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ ஆர் ரகுமானின் மகன் ஏஆர்ஆர் அமீன், தற்போது instagram ரீல்ஸ் வீடியோவிற்காக ஒரு நிமிட பாடல் ஒன்றை பாடி வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வையாளர்களை பெற்று வருகிறது. ஏ ஆர் ரகுமான் மகன் ஏஆர்ஆர் அமீனின் குரலை கேட்கும் பொழுது அப்படியே ரகுமான் போல் இருப்பதாக பலரும் கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் ஆரம்பத்தில் இளையராஜா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.பின்னார் மணிரத்னம் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசைப் புயல், ஆஸ்கர் நாயகன், போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் 2019 இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஆல்பம் பாடலை வெளியிட்ட AR ரஹ்மான் மகன் ARR அமீன்.! குரல் அப்படியே அப்பா மாதிரியே இருக்கே.! 1

விளம்பரம்

சென்னையில் இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஏ ஆர் ரகுமான். இவரது இயற்பெயர் திலீப் குமார் ஆகும். தந்தை இறப்புக்குப் பின்னர் இசுலாம் மதத்தை தழுவினார். இவருடைய அக்கா ஏ ஆர் ரஹைனாவும் ஒரு பாடகியாக இருக்கிறார். ரஹைனாவின் மகன்தான் ஜீவி பிரகாஷ். ரகுமான் 1985 ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர், பின்னர் தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கிட்டார் போன்றவற்றை வாசிக்கக் கற்றுக் கொண்டார். பதினோரு வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்ட் வாசிப்பதற்காக சேர்த்தார். பின்னர் எம் எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் உசேன் போன்ற பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் கடைசி மகன் தான் அமீன்.

தொடர்புடையவை  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

முதல் ஆல்பம் பாடலை வெளியிட்ட AR ரஹ்மான் மகன் ARR அமீன்.! குரல் அப்படியே அப்பா மாதிரியே இருக்கே.! 3
தற்போது instagram ரீல்ஸ் வீடியோவிற்காக அமீன் ஒரு வீடியோ ஒன்றை பாடி வெளியிட்டு இருக்கிறார். இசைக் கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் உள்ளிட்டோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்காக இதுபோல் ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்கள். புதுமுக இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் நோக்கத்தில் மீட்டா என்கிற ஒரு நிறுவனம் ஒரு நிமிட பாடல் என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா ய, பென்னி தயால் சிவாங்கி, பிரியங்கா தேஷ்பாண்டே போன்றவர்கள் அது போல் பாடி ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் மகன் அமீன் “அடியே சோனாலி” என்கிற பாட்டை பாடி வெளியிட்டு இருக்கிறார். இப்பாடல் வெளியான நான்கு நாட்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ ஆர் ரகுமான் மகன் ஒரு நிமிட பாடலை அறிமுகப்படுத்திய மீட்டா நிறுவனத்துடன் இணைவது தமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அவர் பாடிய அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  65ஆண்டு சினிமா பயணம்..! அசராமல் தொட்ட உலகநாயகன்..! THUG LIFE படப்பிடிப்பில் கமலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment