ஐ லவ் யூ புருஷா.! 22வது திருமணநாளில் அழகிய வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய ராதிகா.!

நடிகை ராதிகா சரத்குமார் தற்போது தனது 22 வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பல நல்ல நாடகங்களை இயக்கியதன் மூலமாக மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ராதிகா. இவர் அதற்கு முன்பாக பல படங்களில் நடித்திருக்கிறார். கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ராதிகா சரத்குமார். இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பதற்காக சென்னை வந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு இவர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார். இவர் சரத்குமாரை திருமணம் செய்தது கொள்வதற்கு முன்பாக மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டார். பிரதாப் பொத்தனுடன் விவாகரத்து ஆன பிறகு இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த குழந்தைதான் ரயான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ லவ் யூ புருஷா.! 22வது திருமணநாளில் அழகிய வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய ராதிகா.! 1

விளம்பரம்

வெள்ளித்திரை சின்னத்திரை என்று இரண்டிலும் சரிசமமாக ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார் ராதிகா. தொலைக்காட்சி தொடர்களில் முதன்முதலாக சித்தி என்கிற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெறவே, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி, சித்தி பாகம் 2 ஆகியவற்றில் நடித்தார். இவரும் இவரது கணவரும் இணைந்து ராடன் மீடியா என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதன் மூலமாக பல தொடர்களை அவர்கள் தயாரித்திருக்கின்றனர். தனது கணவருடன் சேர்ந்து 2006ஆம் ஆண்டு முதன்முறையாக அரசியலில் இறங்கினார் ராதிகா் 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்கிற ஒரு கட்சியை தொடங்கி அதற்கு துணை பொது செயலாளர் ஆகவும் இருக்கிறார். படம் இயக்குவது, நடிப்பது, தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் தயாரிப்பது, அரசியல் என பல துறைகளிலும் இயங்கி வருகிறார்.

தொடர்புடையவை  கோபத்தில் பத்திரகாளியாக மாறிய ஜனனி..! பயந்து போய் பார்த்த ஆதிகுணசேகரன்..! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ

ஐ லவ் யூ புருஷா.! 22வது திருமணநாளில் அழகிய வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய ராதிகா.! 3

விளம்பரம்

இந்த நிலைகள் ராதிகாவிற்கும் அவரது கணவருக்கும் திருமணம் ஆகி 22 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதையொட்டி ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து சரத்குமார் பற்றி பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதில் தங்கம் போல இதயம் கொண்ட ஒரு மனிதர் இவர், சிங்கம் போல் இதயம் கொண்டவர். என்னுடைய பலத்திற்கு தூணாக நிற்பவர் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment