மரண குத்தாட்டம் போடும் தளபதி.! ரஞ்சிதமே பாடலின் HD வீடியோ சாங் வெளியானது.!

தளபதி நடிப்பில் வெளியாகி 300 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து வரும் வாரிசு படத்தில் இருந்து “ரஞ்சிதமே” பாடலின் வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் 66 ஆவது படமாக உருவாகியிருந்த படம் தான் வாரிசு. குடும்ப கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற கருவை மையமாகக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. 16 நாள் முடிவில் சுமார் 300 கோடி வசூலை நெருங்கி வருவதாக தெரிகிறது. 13 நாள் முடிவில் 250க்கும் அதிகமான கோடி வசூலை பெற்றிருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரண குத்தாட்டம் போடும் தளபதி.! ரஞ்சிதமே பாடலின் HD வீடியோ சாங் வெளியானது.! 1

விளம்பரம்

16 நாட்களைக் கடந்தும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வாரிசு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் பிவிஆர் திரையரங்குகளில் மற்ற திரைப்படங்களை விட அதிக காட்சிகளுடன் வாரிசு படம் திரையிடப் பட்டு வருகிறது. திருச்சியில் உள்ள மரியம் திரையரங்கில் இதுவரை விக்ரம் படத்திற்கு தான் அதிக பார்வையாளர்கள் வருகை தந்தனர் என்கிற சாதனை இருந்தது. தற்போது வாரிசு திரைப்படம் அதை முறியடித்து அதிகமான பார்வையாளர்களுடன் பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல ஈரோடு, திருநின்றவூர், அறந்தாங்கி போன்ற பல ஊர்களில் திரைப்படத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. 16 வது நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் 193 கோடி அளவிலும், வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர்களும் உலகம் மொத்தமாக 275 கோடி வசூலும் நெருங்கி உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடையவை  "So Beautiful, So Elegant, Looking Like a Wow" தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..!

மரண குத்தாட்டம் போடும் தளபதி.! ரஞ்சிதமே பாடலின் HD வீடியோ சாங் வெளியானது.! 3

விளம்பரம்

வாரிசு படம் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தளபதி விஜய் தனது 67வது படத்தில் அடுத்த அதிரடிக்கு தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் வாரிசு படத்தில் இருந்து hd குவாலிட்டி தரத்தில் ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் தீ தளபதி பாடலும், ஜிம்மிக்கி பொண்ணு, சோள ஆஃப் வாரிசு பாடலும் வெளியான நிலையில் தற்போது மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஞ்சிதமே பாடல் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த பாடலை காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: T-Series

விளம்பரம்

Leave a Comment