நம்ம தேவயானி மகளா இது? இவ்வளோ நல்லா வளந்துட்டாங்களே.! புடவையில் தேவயானி மகளின் புகைப்படம்

தமிழில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை தேவயானியின் மகளின் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. புடவையில் பார்ப்பதற்கு அப்படியே நடிகை தேவயானி போலவே இருக்கிறார் அவரது மகள் இனியா. முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பழமொழிகளிலும் நடித்திருக்கிறார். ஹிந்தி மற்றும் வங்காள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்து வருகிறார் தேவயானி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்கிற தொடரில் நடித்து பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிப்போனார். கோலங்கள் நாடகம் 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை சுமார் 7 ஆண்டுகள் ஒளிபரப்பாகியது.

நம்ம தேவயானி மகளா இது? இவ்வளோ நல்லா வளந்துட்டாங்களே.! புடவையில் தேவயானி மகளின் புகைப்படம் 1
அதன் பின்னர் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் மஞ்சள் மகிமை்என்ற நாடகத்திலும், ராஜ் தொலைக்காட்சியில் கொடி முல்லை போன்ற நாடகத்திலும் நடித்தார். ஆனால் இந்த நாடகங்கள் எல்லாம் பெரிய அளவிற்கு பேசப்படவில்லை. பின்னர் மீண்டும் 2011 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சிக்கு திரும்பிய அவர் முத்தாரம் என்கிற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட அவர் 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் என்கிற சீரியலின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் மூலமாக மீண்டும் பழையபடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தேவயானி. தேவயானியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவரது கணவர் ராஜ்குமார் ஒரு இயக்குனராவார். அவரது தம்பி நகுல் சில படங்களிலும் நடித்து வருகிறார். ராஜ்குமார் மற்றும் தேவயானி காதலுக்கு தேவயானியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. வீட்டின் கடும் எதிர்ப்பு காரணமாக திருத்தணி கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஜவான் பாத்துட்டு நான் உயிரோட இருப்பேனானு தெரியல" கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட ட்வீட்.!

நம்ம தேவயானி மகளா இது? இவ்வளோ நல்லா வளந்துட்டாங்களே.! புடவையில் தேவயானி மகளின் புகைப்படம் 3
தேவயானி ராஜகுமாரன் தம்பதிகளுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 21 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தேவயானியின் மகள் இனியாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அடிக்கடி சொந்த ஊரில் வைத்திருக்கும் தோட்டத்திற்கு குடும்பத்துடன் தேவயானி சென்று வருவது வழக்கம். அப்படி சமீபத்தில் எடுத்த புகைப்படத்தில் தேவயானி மகள் புடவையுடன் பார்ப்பதற்கு அப்படியே தேவயானி போலவே இருக்கிறார். அவருடைய சிரிப்பை பார்க்கும் பொழுது அவரது தந்தை ராஜ்குமார் போலவே இருக்கிறார். புடவை உடன் அவர் பார்ப்பதற்கு தேவயானி போலவே இருக்கிறார். இதை பார்த்த தேவயானி ரசிகர்கள் இது நம்ம தேவயானியின் மகளா என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்றும் தங்களது கருத்துக்களை கமெண்ட்களாக போட்டு வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment