நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களிடையே அறிவுரை கூறியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

2003 ஆம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய அவர் 2023 வரை சுமார் 75 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கனெக்ட். பேய் படத்தில் இரண்டாவது முறையாக நடித்து அசத்தியிருந்தார் நயன்தாரா. நயன்தாராவிற்கு கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆண்டாக அமைந்தது.

ஏனென்றால் அவர் ஜூன் மாதம் தனது ஏழு வருட காதலனான விக்னேஷ் சிவனை கரம் பிடித்திருந்தார். அதே ஆண்டு அவர் வாடகைத்தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது அட்லீ இயக்கி வரும் தனது முதல் இந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் அவ்வப்போது தனது கணவருடன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட பொங்கலுக்கு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற அவர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் கத்தரிப்பூ கலரில் புடவை அணிந்து கொண்டும், கொண்டை போட்டுக் கொண்டும், அதில் மல்லிகை பூ வைத்துக்கொண்டும் தேவதை போல் ஒளிரும் அழகில் அந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகம் தன்னுடைய 35 ஆம் ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடி வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாசிடராக நயன்தாரா இருக்கிறார்.

இதனால் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற அவர் அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அறிவுரை வழங்கியும் சிறப்பாக பேசியிருக்கிறார். அப்போது பேசிய நயன்தாரா வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள், மிகவும் டென்ஷன் எடுத்துக் கொள்ளாதீர்கள், அனைவருக்கும் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் ,அந்த வெற்றி கிடைக்கும் நாள் வரும் பொழுது வருத்தப்பட்ட நேரங்கள் குறித்து நீங்கள் கவலையாக இருப்பீர்கள்.

கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை என்பதை மறந்து விடாதீர்கள். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் எப்போதும் பணிவுடனும், நிதானத்துடனும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர்களுக்காக தினமும் ஒரு பத்து நிமிடத்தையாவது செலவிடுங்கள், அதில் தான் அவர்களுக்கு மகிழ்ச்சி என்று அவர் பேசியிருக்கிறார்.

பொதுவாக தனது படங்களுக்கு நடக்கும் விழாக்களில் கூட கலந்து கொள்ளாத அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையில் தோன்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. Watch the Below Video.!
Youtube Video Code Embed Credits: ABP Nadu