தனுஷின் வெறித்தனமான நடிப்பில் வெளியானது “வாத்தி” படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் “வாத்தி” என்கிற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. தமிழில் “வாத்தி” என்றும் தெலுங்கில் “சார்” என்றும் இந்த படம் உருவாகி இருக்கிறது. வாத்தி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த நான்காம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கட் அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷின் வெறித்தனமான நடிப்பில் வெளியானது "வாத்தி" படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

ஏற்கனவே படத்தில் இருந்து வா வாத்தி என்கிற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார். பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்தும், ரிங்டோனாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் படத்திலிருந்து சமீபத்தில் டீசர் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பள்ளி வாத்தியாராக தனுஷ் வருவது போலவும் ,அங்கு அவருக்கு டீச்சராக இருக்கும் சம்யுக்தாவுடன் காதல் ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. தனுஷின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாக வாத்தி டீசரை படக் குழு வெளியிட்டு இருந்தது. ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்தபோதும் இன்று தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் சக்கை போடு போட்டது.

தொடர்புடையவை  பகாசூரன் படத்துக்காக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் மன்சூர் அலிகான்.! யப்பா என்னா எனர்ஜி

தனுஷின் வெறித்தனமான நடிப்பில் வெளியானது "வாத்தி" படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.! 3
சுமார் நூறு கோடி வரை வசூலை அள்ளி இருந்தது திருச்சிற்றம்பலம். அந்த படத்திற்கு பின்னர் நானே வருவேன் என்கிற படத்தில் இரட்டை படத்தில் நடித்திருந்தார். தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்திலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் பணிகள் எல்லாம் முடிந்து வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்த்த வாத்தி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sithara Entertainments

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment