பிக்பாஸ் கொண்டாட்டம் மேடையிலேயே வைத்து அசீமும் விக்ரமும் நேருக்கு நேர் சண்டையிட்டுக் கொண்டுள்ள ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் முடிந்த பிறகும் இருவரும் சண்டையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அடிக்கடி சண்டை சச்சரவு என்று பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சண்டைகள் இருந்து வந்தது. விக்ரமனுடன் மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த அனைவருடனும் சண்டை போட்டார் அசீம். அசீம் போடும் சண்டை என்பது சாதாரண சண்டையாக இல்லாமல், எல்லை மீறி ஒருமையில் பேசுவதும், தரக்குறைவாக பேசுவதும், அவர்களின் தொழிலை கேலி கிண்டல் செய்வதுமாக இருந்தால் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் இன் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அசீமுக்கு தான் ஹாட்ஸ்டார் இல் அதிக வாக்குகள் கிடைத்தது என்றும், அதனால் அவர் தான் வெற்றியாளர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் விக்ரமன் தொடர்ந்து அசீம் பற்றி பேட்டிகளில் கூறி வந்தார் இப்படி தரக்குறைவாக பேசிய ஒருவர் எப்படி வெற்றி பெற முடியும், ஹாட்ஸ்டார் வாக்குகளை எல்லாம் நம்ப முடியாது என்கிற ரீதியில் பேட்டி கொடுத்து வந்தார் விக்ரமன். இதற்கு அசீமும் தக்க பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. எந்த பிக்பாஸ் முடிந்தாலுமே பிக்பாஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது நடந்துள்ள பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு நிவாஷினியை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர். மகேஸ்வரியும் விக்ரமனும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது தனலட்சுமிக்கு பிக்பாஸ் வீட்டில் நீங்கள் யார் போல் மாறுவீர்கள் என்று கேட்கப்படுகிறது, அதற்கு அவர் நான் அசீம் அண்ணனாக மாற வேண்டும் என்று பதிலளிக்கிறார். மணிகண்டனிடம் இந்த வீட்டில் உள்ள ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் யாருடன் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் குயின்சி என்று பதில் அளிக்கிறார். அதேபோல் இந்த வீட்டில் யார் அதிகமாக புறணி பேசுவார்கள் என்று விக்ரமனுக்கு ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது அவர் அசீம் என்று பதில் சொல்ல, அசீம் கடுப்பாகி என்னை சொல்பவர்கள் யாரோ அவர்கள்தான் இந்த வீட்டில் நிறைய புறணி பேசி இருக்கிறார்கள் என்று பதிலடி கொடுக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் வெளியே வந்த பின்னரும் கொண்டாட்டத்திலும் இவர்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television