உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கவின்.! கவினுக்காக நீண்ட பதிவு ஒன்றை போட்ட அபர்ணா தாஸ்.!

இன்று தமிழகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் டாடா. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவினும் நடிகை அபர்ணாதாசும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியானது முதலே திரைவிமர்சகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், பல இடங்களில் சென்டிமென்ட் காட்சிகளில் அழ வைத்து விட்டதாகவும் கருத்துக்களை கூறினர். இதனால் படக்குழு ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது கவினுக்கு நன்றி சொல்லி உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார், இந்த படத்தில் நடிகை அபர்ணாதாஸ். இந்த பதிவை பார்த்த பின்னர் இருவரும் காதலிக்கிறார்களோ என்கிற கேள்வி நெட்டிசன்களிடையே எழுந்துள்ளது. மிக நீண்ட பதிவு ஒன்றை எழுதி இருக்கும், அவர் எனக்காக எப்பொழுதும் இறந்ததற்கு நன்றி கவின், என்னுடைய சக நடிகராக இருந்ததற்கு நன்றி. நாளை நமக்கான மிக முக்கிய நாள். அதற்காக உனக்கு நல்வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறேன்.

தொடர்புடையவை  யாருமே பாக்காத விஜயின் ஹலமதி ஹபீபு பாடல்...சத்தமில்லாமல் அதிகாரபூர்வமாக வெளியீடு

உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கவின்.! கவினுக்காக நீண்ட பதிவு ஒன்றை போட்ட அபர்ணா தாஸ்.! 1
உன்னை எனக்கு ஒரு வருடமாக தெரியும். இந்த படத்தை கொடுத்ததற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்காக நான் மிகவும் உழைத்திருக்கிறேன். தவறான அனைத்திற்கு எதிராகவும் போராடி அதை நீங்கள் சரியாக மாற்றினீர்கள், நாம் எப்பொழுது பேசிக் கொண்டிருந்தாலும் நீங்கள் படத்தை எப்படி மெருகேற்றுவது என்பது குறித்து தான் பேசியிருக்கிறீர்கள். உங்களை கீழே இழுத்து விட நிறைய தடைகள் இருந்தது. ஆனால் நீங்கள் அனைத்திற்கும் எதிராக போராடி இந்த படம் அழகாக வருவதற்கு உறுதுணையாக இருந்தீர்கள். உங்களுடைய முயற்சி அனைத்தும் இந்த படத்தை அழகாக்கியது. அனைத்து நேர்காணலிலும் மேடைகளிலும், பல விஷயங்களை சொல்ல விரும்பினேன். நீங்கள் இல்லை என்றால் இந்த படம் எப்படி போயிருக்கும் என்று தெரியாது. அனைத்திற்கும் நன்றி. நான் பல நேர்காணங்களில் உங்களுக்கு மிகவும் கோபம் வரும் என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் தற்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சரியான விஷயங்களுக்காகவே கோபம் கொண்டீர்கள்.

விளம்பரம்

உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கவின்.! கவினுக்காக நீண்ட பதிவு ஒன்றை போட்ட அபர்ணா தாஸ்.! 3
இந்த அழகான படத்தை உருவாக்கியதற்கும், அதில் என்னை ஒரு பாகமாக மாற்றியதற்கும் மிக்க நன்றி. நீங்கள் ஒரு நல்ல நடிகர். நீங்கள் இன்னும் மிகவும் பல உயரத்திற்கு செல்வீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் உங்களுக்கு நல்ல தோழியாக என்றென்றும் உங்களுடனே இருப்பேன். உங்களுக்கு எதிராக யாராவது செல்கிறார்கள் என்றால், உங்களுக்கு எது சரியானதோ அதையே நீங்கள் செய்யுங்கள். உங்கள் பின்னால் நான் எப்பொழுதும் இருப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் என்னால் இங்கு அதிகம் எழுத முடியவில்லை. அதனால் நான் சொல்ல நினைத்த அனைத்தையும் ஒரு புகைப்படமாக வெளியிடுகிறேன் என்று சொல்லி கவினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த பின்பு கவினும் அபர்ணாதாஸும் காதலிக்கிறார்களோ? என்ற ரீதியில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  லியோ படத்துக்காக வெறித்தனமாக கம்போஸ் செய்யும் அனிருத்.! ஒரே வீடியோ தான் எல்லாரும் கிளோஸ்.!

உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கவின்.! கவினுக்காக நீண்ட பதிவு ஒன்றை போட்ட அபர்ணா தாஸ்.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment