விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதி மேடையில் நின்று கொண்டிருந்தனர். ஷிவின் மூன்றாவது இடத்தை பிடிக்க விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் கடைசி இறுதி மேடையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அசீமின் கையை உயர்த்தி அசீமை வெற்றியாளராக அறிவித்தார் கமலஹாசன். அசீமிற்கு 50 லட்சம் ரூபாயும், புதிதாக மாருதி காரும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அதிரடியாகவும், சக போட்டியாளர்களை ஒருமையில் பேசியும் விளையாடி வந்தவர் அசீம். சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசுவதும், பெண் போட்டியாளர்களை வாடி போடி என்று பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். மேலும் கோபத்தில் ஒருவரின் தனிப்பட்ட தொழில்களை விமர்சிக்கும் விதமாக அமுதவாணனை, “நீ விஜய் டிவியில் இருந்தால் பெரிய ஆளா?” என்றும், விக்ரமனை “வெள்ளை சட்டை போட்டால் நீ பெரிய அரசியல்வாதியா?” என்றும் தொடர்ந்து அசிங்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
கமல்ஹாசனை வாடா போடா என்று பேசினாரா அஜீம்..
ஏனென்றால் இதை சொன்னதே கமல்தான்.#biggbosstamil #BiggBossTamil6 #vikraman #aramvellum #AbuserAzeem #Totalwinnervikaraman #AramVellum #kamalhaasan pic.twitter.com/TrjDznEIwB
— Noorul ibn Jahaber Ali (@nooruljourno) February 11, 2023
#AbuserAseem Idha nee show la irukum bodhe sollirukanum.
#TotalWinnerVikraman #Vikraman #TharkuriDhana #makkunaayaganazeem #MakkuMani #TaskWasteDhana pic.twitter.com/ujmmZ0Bzh2— Eugine (@uginpinto) February 11, 2023
பின்னர் ஒரு கட்டத்தில் இவரின் பேச்சுகள் எல்லை மீறி சென்றது. திருநங்கையாக இருக்கும் ஷிவினின் குரலை கிண்டல் செய்தும், அவரைப் போல் உடல் அசைவுகளை செய்து காட்டியும் மிகவும் அசிங்கப்படுத்தினார் அசீம். மேலும் தனலட்சுமி போன்றவர்கள் மீது கை வைத்து தள்ளி மிகவும் முரட்டுத்தனமாக விளையாடினார். இதை தொடர்ந்து கண்டித்து வந்த கமலஹாசன் ஒரு கட்டத்தில் “உங்கள் மகன் இதை பார்த்துக் கொண்டிருப்பான்” எனவே ஒழுங்காக விளையாடுங்கள் என்று அசீமை திட்டினார். காட்டமாக கண்டிக்காமல் பூசினார் போல் அறிவுரை வழங்கி வந்தார் கமல். இது ஒரு கட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ரெட் கார்டு கொடுத்து இவரை வெளியேற்றுங்கள் என்று தொடர்ந்து மக்களே கமலுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் விஜய் டிவி அதை செய்யாமல் அவரை வெற்றியாளராக அறிவித்து 50 லட்ச ரூபாய் பரிசை தூக்கிக் கொடுத்தது. இது தவறான முன்னுதாரணம் என்று சொல்லி நெட்டிசன்கள் இதை இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர். மேலும் விஜய் டிவியை புறக்கணிக்க சொல்லி BoycottVijayTv என்கிற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.


மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல பிக்பாஸ் முடிந்து இத்தனை நாட்கள் கழித்தும் பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது. பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் அசீம். தற்போது கமல் கூறிய கருத்தை முன்வைத்து பேசிய அசீம், கமலை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேட்டியின் போது அசீம் மகன் குறித்த மீம் ஒன்று காட்டப்பட்டது. இதை பார்த்த அசீம், எல்லாமே எனக்குப் என் பையன் தான், பிக்பாஸில் இப்படி கோபப்படுகிறீர்களே? இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் உங்களை பற்றி என்ன நினைப்பான்? என்று சொல்கிறார்கள். ஏன்டா என் மகன் கூட நேரம் செலவிட பல ஆயிரம் மணி நேரம் இருக்கிறதடா. இந்த ஷோவை பார்த்து தான் என் மகன் வளர வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று அங்கும் வாடா போடா என்று ஒருமையில் பேசினார் அசீம்.

இதை பார்த்த நெட்டிசங்கள் உங்கள் பையன் குறித்து பேசியது கமல் தான். கமல் தான் அடிக்கடி அசீம் மகன் குறித்தும் அசீம் மகன் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் அறிவுரை கூறினார். எனவே கமலைத் தான் மறைமுகமாக அசீம் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று சொல்லி இணையத்தில் பரப்பி வருகின்றனர். கெத்தாக பேசுகிறேன் என்று சொல்லி வீணாக வம்பில் மாட்டிக் கொள்ளும் அசீம் என்றைக்கு தான் திருந்துவாரோ என்று தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்