இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் சினீக் பீக் காட்சிகள் எனப்படும் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. படம் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்த ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக பிரபலமானவர் இயக்குனர் மோகன் ஜி் இவர் தற்போது செல்வராகவனை வைத்து பகாசூரன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனராக இருக்கும் மோகன் ஜி, தற்போது தனது அடுத்த அதிரடி ஆட்டத்திற்கு தயாராகி இருப்பதாகவே தெரிகிறது. மோகன் ஜியின் படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பியே வந்திருக்கிறது. குறிப்பிட்ட சாதியை எதிர்க்கும் விதமாக இவர் தனது படங்களை இயக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் நாடக காதல் பற்றியும் இவரது படங்களில் மறைமுகமாக விமர்சித்து இருப்பதாலும் மோகன் ஜி இயக்கம் அனைத்து படங்களுமே ஏதாவது ஒரு சர்ச்சைக்கு உள்ளாகி வருவது வழக்கமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இவரது திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இவரது படங்கள் வசூலையும் வாரி கொடுத்து விடுகிறது. பழைய வண்ணாரப்பேட்டை, திரளபதி, ருத்ர தாண்டவம் என மூன்று படங்களை இயக்கியிருக்கும் மோகன் ஜி தற்போது தனது நான்காவது படமாக பகாசூரன் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் பணிகளும் முடிந்து படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூகத்தில் நடக்கும் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு படத்தை இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மோகன் ஜி, அதே போன்ற ஒரு கதையை இந்த முறையும் கையில் எடுத்திருக்கிறார்.

படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது பள்ளிக்கூடங்களில் நடக்கும் காதல்கள் பற்றியும், தற்போது மொபைல் போன்களால் பள்ளி சிறுவர்கள் எவ்வாறு சீரழிகின்றனர் என்பதையும், வீடியோ கால் மூலமாக சமூகத்தில் எவ்வாறு அவலங்கள் நிகழ்கிறது என்பதையும் இந்த ட்ரெய்லர் எடுத்துக்காட்டியிருந்தது. மேலும் உங்கள் குழந்தைகள் அறையை பூட்டிக்கொண்டு மொபைல் போனில் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள் போன்ற வசனங்களும் இடம்பெற்றிருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் காதலும் அதற்கு அடுத்து நடக்கும் அத்துமீறல்களும் குறித்த படமாக இது இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த காட்சிகளை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Movie Buff Tamil