சீரியல் மற்றும் படங்களில் தாலி கட்டுவது போன்ற காட்சிகள் எடுக்கப்படும். அது எப்படி எடுக்கப்படுகிறது என்பதை தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது அமிர்தாவிற்கும் எழிலுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. எழிலும் அமிர்தாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த விஷயம் எழிலின் அம்மா பாக்யாவிற்கு மட்டுமே இத்தனை நாட்களாக தெரியும். அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆகி சில ஆண்டுகளில் கணவனை இழந்தவர். மேலும் அவருக்கு கைக் குழந்தை ஒன்றும் இருக்கிறது. தற்போது எழில் அம்ரிதா காதலை பற்றி அறிந்து கொள்ளும் எழிலின் பாட்டி எழிலுக்கு அவசர அவசரமாக இன்னொரு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்து வைக்கிறார். அதற்கு முக்கிய காரணம், பணத் தேவையும் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எழிலின் அப்பா கோபி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் இருந்து வருகிறார். தற்போது கோபி கட்டிய வீட்டில்தான் எழில், பாக்யா, கோபியின் அம்மா, அப்பா, செழியன், ஜெனி எல்லோரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சண்டையில் கோபி வீடை காலி செய்யுமாறு கூறுகிறார். ஆனால் எழிலோ தான் எழுபது லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று சவால் விடுகிறார். ஆனால் எழிலால் எழுபது லட்ச ரூபாயை உடனே திரட்ட முடியவில்லை. எழில் வேலை பார்க்கும் தயாரிப்பாளர் தன் மகளை திருமணம் செய்து கொண்டால் உனக்கு அந்த 70 லட்சம் தருகிறேன் என்று கூறுகிறார். இதற்கு எழிலின் பாட்டியும் உடந்தையாக இருக்கிறார். எனவே எழிலுக்கு எப்படியாவது அந்த தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார் எழிலின் பாட்டி ஈஸ்வரி. ஆனால் கடைசி நிமிஷத்தில் பாக்யா அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைத்துவிட்டார்.

கடந்த வாரம் முழுவதும் எழிலின் திருமண எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது அந்த திருமணம் எப்படி நடைபெற்றது என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் ரித்திகா. அதில் எழில் தான் அமிர்தா களத்தில் தாலி கட்டினார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டிருக்கிறார் அமிர்தா. இதை பார்த்து ரசிகர்கள் ஓஹோ இப்படித்தான் சீரியல் மட்டும் படங்களில் திருமணம் நடக்கிறதா என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O