சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் First Single Glimpse வீடியோ வெளியானது.! இதோ வீடியோ.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தனது 22 வது படமான மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு முடிவடைந்து இருக்கின்றது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சிவகார்த்திகேயன். இவர் அதற்கு முன்பு ஜோடி நம்பர் ஒன்றில் பங்கேற்ற ஆடி டைட்டிலையும் வென்றிருக்கிறார். இவருக்கு முதன்முறையாக மெரினா என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலமாக இவர் ஹீரோவாக அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் First Single Glimpse வீடியோ வெளியானது.! இதோ வீடியோ.! 1
அதன் பின்னர் இவர் மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரு படங்களும் 100 கோடி வசூலை பெற்றிருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிரின்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. தொடர்ந்து 100 கோடி வசூலை அள்ளி ஹாட்ரிக் வெற்றியை ஈட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், பிரின்ஸ் அந்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை. தற்போது தனது 22 ஆவது படமாக மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அந்த படத்தின் பட பூஜை நடைபெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "கொல குத்தாக வெளியாகியிருக்கும் தாய்கிழவி"!! "8 ஆண்டுகள் பிறகு DnA காம்போ "!! திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் First Single Glimpse வீடியோ வெளியானது.! இதோ வீடியோ.! 3
இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் இயக்குனர் சங்கர் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது படத்தில் இருந்து முதல் பாடலில் சில நிமிட காட்சிகளை க்ளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறது படக்குழு. அந்த வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment