பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் ரித்திகா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மாலை டம் டம் பாடலுக்கு தனது மாமியார் பாக்கியவுடன் இணைந்து செம்ம Cute ஆக நடனம் ஆடுகிறார். அந்த அழகான வீடியோ தற்போது பார்வையாளர்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கணவனால் கைவிடப்பட்ட பாக்யா தற்போது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, கணவன் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை விற்கப் போவதாகவும், காலி செய்து விடு படியும் கணவன் ஒரு பக்கம் தொல்லை கொடுத்து வருகிறார். இதை எல்லாம் சமாளித்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டைகள் ஒருபுறம் இருக்க, தனது இளைய மகன் எழில் காதலித்து வரும் அமிர்தா என்கிற பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். வீடை காலி செய்யும்படி தந்தை கோபி தொந்தரவு கொடுத்து வரும் நிலையில், எழில் நான் அந்த பணத்தை கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவரால் அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை. இதனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது எழில் வேலை பார்த்து வரும் தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து கொண்டால் அந்த பணத்தை எழிலுக்கு தருவதாக அந்த தயாரிப்பாளர் உறுதி அளித்திருந்தார். இதனால் கட்டாய திருமணத்தின் பெயரில் தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து கொள்ள எழில் சம்மதித்திருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் பாக்யா எழிலுக்கும் தயாரிப்பாளர் மகளுக்கும் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி, எழில் காதலித்து வந்த அமிர்தாவையே அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.

கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ரெண்டிங்கில் இருக்கும் மாலை டம் டம் பாடலுக்கு தனது மாமியார் பாக்கியவுடன் இணைந்து செம்ம Cute ஆக நடனம் ஆடுகிறார். அந்த அழகான வீடியோ தற்போது பார்வையாளர்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O