தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கூறிய விமர்சனத்தை பாருங்க.!

இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் வாத்தி. இந்த படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் வாத்தி. இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் ஆகிய பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகியிருந்தது. தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்த படம் தயாராகி இருந்தது. இந்த படத்தை சித்தாரா என்டடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலமாக முதல்முறையாக தெலுங்கு படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்திருக்கிறார். பள்ளிக்கூட வாத்தியாருக்கும், கல்வியை வியாபாரமாக மாற்றும் முதலாளிக்கும் இடையே நடக்கும் கதையாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கூறிய விமர்சனத்தை பாருங்க.! 1
இந்தப் படத்தின் ட்ரைலர், டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. குறிப்பாக ஸ்வேதா மோகன் பாடியிருந்த வா வாத்தி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் ட்ரெய்லர் வெளியானபோது, “படிப்பு என்பதை பிரசாதம் போல் கொடுங்கள், அதை வியாபாரம் செய்யாதீர்கள்” என்று அதிரடி வசனங்கள் இருந்தது. இதனால் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வந்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே தெரிவித்தனர். மேலும் ட்விட்டரில் வந்த பாசிட்டிவ் ரிவ்யூகளும் படம் நன்றாக இருப்பதாகவே தெரிந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது காட்சிகள் முடிந்து வெளியே வந்த பலரும் படம் குறித்து விமர்சனங்களை கூறி வருகின்றனர். அப்போது படம் மிகவும் போர் அடித்ததாகவும் உட்கார முடியவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  'தட்டி விட்டா தாறுமாறு'.! துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா HD வீடியோ பாடல் வெளியானது.!

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கூறிய விமர்சனத்தை பாருங்க.! 3

 

விளம்பரம்

தனுஷ் ரசிகர்களோ அதற்கு எதிர் மாறாக படம் மிகவும் நன்றாக இருந்ததாகவும் ஆனால் தெலுங்கு வாடகை வீசுவதாகவும் கூறினர். அவர்கள் கூறிய அந்த விமர்சனத்தை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Chennai Waalaa

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment