மோகன்ஜி வேற லெவல் பண்ணி இருக்காரு.! படம் தாறுமாறா இருக்கு.! பகாசூரன் பற்றி பொதுமக்கள் விமர்சனம்.!

இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, பகாசூரன் திரைப்படம். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் பலரும் தற்போது பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர். படம் மிக நன்றாக இருப்பதாகவும், தற்போது சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மோகன் ஜி கூறி இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தற்போது இயக்குனர் செல்வராகவனை வைத்து பகாசூரன் என்கிற படத்தை இயக்கியிருந்தார். இயக்குனர் மோகன்ஜியின் மீது ஒரு விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை உயர்த்தியும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாழ்த்தியும் படம் எடுப்பவர் என்கிற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மோகன்ஜி வேற லெவல் பண்ணி இருக்காரு.! படம் தாறுமாறா இருக்கு.! பகாசூரன் பற்றி பொதுமக்கள் விமர்சனம்.! 1
அதனால் இந்த முறை அதேபோல் ஏதாவது குறிப்பிட்ட சாதிக்கு எதிராக படம் எடுத்து இருப்பார் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், மொபைல் ஃபோன்களால் சமூகம் எவ்வாறு சீரழிகிறது என்பது குறித்த கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்பொழுதும் ரிச்சர்ட் ரிஷியை ஹீரோவாக கொண்டு படம் எடுக்கும் மோகன் ஜி இந்த முறை வித்தியாசமாக செல்வராகவனை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பொழுது, கழுத்தில் ருத்ராட்சங்களுடன் உடம்பு முழுவதும் பட்டை பூசிக்கொண்டு செல்வராகவன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. இதனால் இந்த படமும் ஏதாவது மதம் அல்லது சாதியை அடிப்படையாக கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விளம்பரம்
தொடர்புடையவை  துபாயில் நடந்த திருமணம்.! கணவருடன் குத்தாட்டம் போட்டு செம்ம vibe செய்த பூர்ணா.!

மோகன்ஜி வேற லெவல் பண்ணி இருக்காரு.! படம் தாறுமாறா இருக்கு.! பகாசூரன் பற்றி பொதுமக்கள் விமர்சனம்.! 3
ஆனால் இந்த முறை வித்தியாசமான கதை அம்சத்துடன் மோகன் ஜி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் தற்போது பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் பொதுமக்கள் கூறிய அந்த விமர்சனத்தை பார்க்க..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..!! Watch the Video Below..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: News Reels 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment