பத்து தல படத்துக்காக வெறித்தனமாக Practice செய்யும் சாண்டி மாஸ்டர்.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.!

சாண்டி மாஸ்டர் தற்போது பத்து தல படத்திற்காக மிக தீவிரமாக ப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழகம் அறிந்த ஒரு முக்கியமான நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் முதன்முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 1 என்ற நிகழ்ச்சியின் மூலமாக முதல் முறையாக அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடத்தி வந்தார். அவர்தான் இவருக்கு நடன குழுவிற்கு கோரியோகிராபராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார். இவர் நடனம் பயிற்றுவித்த ஜோடிகள் தான் இறுதியில் டைட்டிலையும் வென்றிருந்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங் ஆப் டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார் சாண்டி மாஸ்டர். பின்னர் இவர் தெலுங்கு மற்றும் கன்னட நிகழ்ச்சிகளிலும் கோரியோகிராபராக பணியாற்றி இருந்தார். இவர் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டு வெளியான ஆக என்கிற படத்தில் தான் கோரியோகிராபராக அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பத்து தல படத்துக்காக வெறித்தனமாக Practice செய்யும் சாண்டி மாஸ்டர்.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.! 1
அதன் பின்னர் இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான இவனுக்கு தண்ணில கண்டம் என்கிற படத்தில் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். பின்னர் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. டான்ஸராகவும் கோரியோகிராபராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். வாலு, ஜித்தன் 2, காலா, சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள், சர்வம் தாள மையம், தில்லுக்கு துட்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ஐங்கரன் போன்ற பல படங்களில் கோரியோகிராபராக பணியாற்றி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் கமல் நடிப்பில் வெளியாகி 500 கோடி கிளப்பில் இருக்கும் விக்ரம் படத்திற்கும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியிருந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார் சாண்டி மாஸ்டர். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சாண்டி மாஸ்டர் மிக ஆக்டிவாக இருக்கிறார். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திருச்சியில் இருந்து சென்னைக்கு உதவ சென்ற அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த கொடுமை.!

பத்து தல படத்துக்காக வெறித்தனமாக Practice செய்யும் சாண்டி மாஸ்டர்.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.! 3
நடன பள்ளி ஒன்றை நடத்தி வரும் சாண்டி அவ்வப்போது தனது மாணவர்களுடன் நடனமாடியும் அல்லது தனது மனைவியின் தங்கையுடன் நடனமாடியும் அந்த வீடியோக்களை தொடர்ந்து பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது பத்து தல படத்திற்கு சிம்புவிற்காக கோரியோகிராபராக இருந்த சாண்டி இப்போது அதற்காக பிராக்டிஸ் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களும் லைக்களையும் குவித்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment