ஈஸ்வரி பாட்டிக்கு முத்தம் கொடுத்து கொஞ்சிய நிலா பாப்பா.! வெளியே துரத்தி விட்ட ஈஸ்வரி பாட்டி.!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நிலா பாப்பா தெரியாமல் ஈஸ்வரி பாட்டி அறைக்குள் நுழைந்து விட்டது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரி பாட்டியை நிலா பாப்பா எழுப்பி விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஈஸ்வரி பாட்டியோ அந்த பாப்பாவிடம் கூட தனது கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். பாக்கியலட்சுமிதொடரில் தற்போது எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.பல சர்ச்சைகளுக்கு பின்னர் இந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை இழந்தவர். திருமணமான சில ஆண்டுகளில் கைக்குழந்தையுடன் இருந்த அமிர்தா, தனது கணவரை ஒரு விபத்தில் இழந்துவிட்டார். இதனால் தனது மாமியார் மற்றும் மாமனார் உடன் வசித்து வந்தார். அவரது கை குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு தானே வேலைக்குப் போய் சம்பாதித்து குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் ஒரு குறும்படத்திற்காக சினிமா துறையில் வேலை பார்த்து வந்த எழிலை அவர் சந்தித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி பாட்டிக்கு முத்தம் கொடுத்து கொஞ்சிய நிலா பாப்பா.! வெளியே துரத்தி விட்ட ஈஸ்வரி பாட்டி.! 1
ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அமிர்தாவின் கதையை கேட்ட பின்னர் எழிலுக்கு அமிர்தா மீது காதலுடன் சேர்த்து மரியாதையும் வந்தது. அமிர்தாவை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு அவருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்று எழில் எண்ணினார். ஆனால் எழிலுக்கு 70 லட்ச ரூபாய் பணத் தேவை இருந்தது. இதற்காக அவர் சினிமாவில் வேலை பார்த்து வந்த தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தார். ஆனால் இந்த கட்டாய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாக்கியலட்சுமி, அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எழில் காதலித்து வந்த அமிர்தாவை திருமணம் செய்து வைத்தார். தற்போது அமிர்தாவை அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டனர். ஈஸ்வரி பாட்டி, செழியன், கோபி ஆகியோர் மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமிர்தாவின் மகள் நிலா பாப்பா தற்போது ஈஸ்வரி பாட்டியின் அறைக்குள் நுழைந்து விட்டது.

விளம்பரம்
தொடர்புடையவை  வந்த முதல் நாளே ஆட்டத்தை தொடங்கிய சாண்டி..மரண குத்து குத்திய ஹவுஸ்மேட்ஸ் | BB Ultimate

ஈஸ்வரி பாட்டிக்கு முத்தம் கொடுத்து கொஞ்சிய நிலா பாப்பா.! வெளியே துரத்தி விட்ட ஈஸ்வரி பாட்டி.! 3
அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரி பாட்டியை எழுப்பி அவருடன் விளையாடத் தொடங்கியது. ஆனால் இரக்கமே இல்லாத ஈஸ்வரி பாட்டி, அந்த குழந்தையை பார்த்து வெளியில் போடி வெளியில் போடி என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் குழந்தை வெளியில் போகாமல் அவரிடமே நின்று விளையாடிக் கொண்டிருக்கிறது. மேலும் பாட்டி பாட்டி என்று அழைத்துக் கொண்டும், அவர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டும் விளையாடிக் கொண்டிருக்கிறது நிலா பாப்பா. அப்போது கூட ஈஸ்வரி பாட்டிக்கு மனம் இரங்காமல் நிலா பாப்பாவை வெளியில் துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த செல்வியை அழைத்து குழந்தையை வெளியே தூக்கிச் செல்லுமாறு கூறுகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தையிடம் கூடவா நீங்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment