முடிவுக்கு வந்தது மௌனராகம் சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ.!

மௌன ராகம் சீசன் 2 சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தற்போது கடைசி நாள் சூட்டிங் எடுக்கப்பட்டு சுபம் போடப்பட்டு விட்டதாகவும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விஜய் தொலைக்காட்சியில் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருப்பது மௌன ராகம் சீரியல். இந்த சீரியல் இரண்டு சீசன்ங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மௌன ராகம் சீசன் 1 ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்ததால், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மௌனராகம் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சக்தியாக ரவீனா தாஹா, கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜீவ் பரமேஸ்வர், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித், ஸ்ருதியாக ஷில்பா, வருணாக சல்மான், தருணாக ராகுல் ராம் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத் தொடர் தற்போது முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்தது மௌனராகம் சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ.! 1

விளம்பரம்

இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் கார்த்திக்கின் முதல் மனைவி மல்லிகா மற்றும் அவருக்கு பிறந்த மகள் சக்தியை, கார்த்திக்கின் இரண்டாவது மனைவி காதம்பரி மற்றும் அவருக்கு பிறந்த மகள் ஸ்ருதி ஆகியோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். முதல் மனைவி மற்றும் அவரது மகளை எப்படியாவது கார்த்திக்கிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று சதித்திட்டம் திட்டி வருகின்றனர். இந்த நிலையில் சக்தி வருண் என்பவரை திருமணம் செய்து கொள்ள அவரது தம்பியை ஸ்ருதி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கதை இன்னும் விறுவிறுப்பானது. தொடர்ந்து சக்திக்கு எதிராக ஸ்ருதி ஏதாவது தீய செயல்களை செய்து கொண்டே வருகிறா.ர் இது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த போதிலும் ஸ்ருதியை வெளியேற்றாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் கதைப்படி தற்போது நகையை திருடியது ஸ்ருதி தான் என்று தெரியவந்து அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி இருக்கிறார் அவரது கணவர். வீட்டிலிருந்து வெளியேறும் ஸ்ருதி மற்றும் அவரது தாய் காதம்பரி இருவரும் மனம் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த கதை முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.முடிவுக்கு வந்தது மௌனராகம் சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ.! 3அதற்கு முன்பாக ஸ்ருதி காதம்பரிக்கு பிறந்த குழந்தை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை கார்த்திக்கே இல்லை, காதம்பரியும் அவரது காதலர் ராஜேஷ் நெருங்கி பழகியதால் பிறந்த குழந்தைதான் ஸ்ருதி என்கிற உண்மை விரைவில் அனைவருக்கும் தெரியவரும். அத்துடன் இந்த நாடகம் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மௌனராகம் சீரியல் முடிவடைந்து விட்டதாகவும் கடைசி நாள் சூட்டிங் எடுக்கப்பட்டு விட்டதாகவும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் சீரியலில் நடித்த அனைவரும் அமர்ந்து கேக் வெட்டியும் இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியில் எத்தனையோ ஓடாத சீரியல்கள் இருக்கிறது. ஆனால் இது நல்ல சீரியல் இதை ஏன் முடிக்கிறீர்கள்? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். கதைக்களம் இன்னும் இருக்கும் நிலையில் எதற்காக சீரியல் முடிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment