ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “துரோகம் பண்ணு” பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. துரோகம் பண்ணு என்கிற வரிகளுடன் இந்த பாடல் தற்போது வெளியாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வையை பெற்று வருகிறது. பூலோகம் படத்தை இயக்கிய என் கல்யாண கிருஷ்ணன் உடன் இரண்டாவது முறையாக ஜெயம் ரவி இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் அகிலன். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பேரடி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருக்கும் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்யாண் கிருஷ்ணனுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படம் நல்ல கதை அமைப்பை கொண்டிருந்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெற முடியவில்லை. தற்போது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. தொடர்ந்து கடந்த ஆண்டு அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய இந்த படம் தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. தற்போது படத்தில்இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. வருகிற மார்ச் 10ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறதாக படக்குழுவினர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று வெளியான அறிவிப்பில் இன்று மாலை 5 மணிக்கு துரோகம் என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தற்போது இந்த பாடல் வெளியாகியிருக்கிறது. சாம் சி எஸ் மற்றும் சிவம் ஆகிய இருவரும் இணைந்து இந்த படலை பாடலை பாடி இருக்கின்றனர். துரோகம் பண்ணு என்கிற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அகிலன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் பாகம் 2, இறைவன், தனி ஒருவன் பாகம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் ஜெயம் ரவி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தற்போது வெளியாகியிருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India