தனது குட்டி மகனை தாலாட்டி தூங்க வைக்கும் அஜய் கிருஷ்ணா.! அஜய் மனைவி வெளியிட்ட Cute வீடியோ.!

சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா தற்போது தனக்கு பிறந்த மகனை தாலாட்டி தூங்க வைக்கும் வீடியோவை அவரது மனைவி ஜெசி பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற பாட்டு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாக பலரின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் பொழுதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவுக்கு வருவதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னை காதலித்து வந்த ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடந்தது. அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பரிசாக அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் அறிவித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது குட்டி மகனை தாலாட்டி தூங்க வைக்கும் அஜய் கிருஷ்ணா.! அஜய் மனைவி வெளியிட்ட Cute வீடியோ.! 1
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உள்ளே வந்து தற்போது பல நிகழ்ச்சிகளில் பாடிவரும் அஜய் கிருஷ்ணாவுக்கு மூன்று அக்காக்கள் இருக்கிறார்கள். அவரது தாயார் சமீபத்தில் இறந்துவிட தனது அக்காக்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார் அஜய் கிருஷ்ணா. பின்னர் அவரது அக்கா ஒருவரின் முயற்சியால் தம்பியின் பாட்டுத் திறமையை வெளிக் கொண்டு வந்து இருக்கிறார். பின்னர் அஜய் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டார். சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் அஜய் தனது instagram பக்கத்தில் கண்ணான கண்ணே கலங்காதடி என்கிற பாடலை ஆல்பம் போல பாடி பதித்திருந்தார். அதை பார்த்த ஜெசி இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று இவருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அப்போது பதில் சொல்லிவிட்டு ஜெஸியின் புகைப்படத்தை பார்த்த அவருக்கு அவரின் நீளமான முடி மீது காதல் ஏற்படவே இருவரும் நண்பர்களாக பழகி தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  சக்திக்கு தெரிய வந்த உண்மைகள்.! அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் சக்தி.! மௌனராகம் ப்ரோமோ.!

தனது குட்டி மகனை தாலாட்டி தூங்க வைக்கும் அஜய் கிருஷ்ணா.! அஜய் மனைவி வெளியிட்ட Cute வீடியோ.! 3
இவர்களின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக தற்போது ஆண் குழந்தை ஒன்றும் பிறந்திருக்கிறது. அந்த செய்தியை சமீபத்தில் ஜெசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் மகனை தாலாட்டி தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அஜய் கிருஷ்ணா. அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் எடுத்து ஜெசி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த அவர் கடமை உணர்ச்சி உள்ள ஒரு தந்தை என்று பகிர்ந்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment