ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் ஆடி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியே ஆடி காட்டிய அமுதவாணன்.!

KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்த ராமராஜனிடம் அவரைப்போலவே நடனமாடி காட்டி இருக்கிறார் அமுதவாணன். அதிலும் குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் ஆடினால் எப்படி இருக்கும் என்று ஆடி காட்டி பலரின் கைத்தட்டல்களை பெற்றிருக்கிறார் அமுதவாணன். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான “நம்ம ஊரு நல்ல ஊரு” என்கிற படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ராமராஜன். இவரது ரசிகர்கள் இவரை “மக்கள் நாயகன்” என்று பாசத்துடன் அழைத்து வருகின்றனர். தற்போது சாமானியன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்ட படர் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக விஜய் டிவிக்கு வந்திருக்கிறார் ராமராஜன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் ஆடி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியே ஆடி காட்டிய அமுதவாணன்.! 1
முதன்முறையாக சின்னத்திரைக்குள் தனது படத்தை ப்ரோமோஷனை செய்வதற்காக அடி எடுத்து வைத்திருக்கிறார் ராமராஜன். இவர் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்கிற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி பல நல்ல கலைஞர்களையும் நகைச்சுவை நடிகர்களையும் வெள்ளித் திரைக்கு வழங்கியிருக்கிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள் ஏற்கனவே வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்க, தற்போது சிங்கப்பூர் தீபன், அமுதவாணன், நாஞ்சில் விஜயன், தங்கதுரை, கே பி ஒய் பாலா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ், ராமர் என பல கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களில் பலர் படத்திலும் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சாமானியன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ராமராஜன் முதல் முறையாக சின்னத்திரைக்கு வருகை தந்திருக்கிறார் ராமராஜன்.

விளம்பரம்
தொடர்புடையவை  எப்படி பாக்கியா இவளோ அழகா இருக்கீங்க? கடலை போடும் பழனிசாமி..! அதிர்ச்சியில் உறைந்த கோபி.!

ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் ஆடி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியே ஆடி காட்டிய அமுதவாணன்.! 3
அமுதவாணன் அப்படியே ராமராஜன் போலவே நடித்துக் காட்டி மிமிக்ரி செய்வதில் திறமை உடையவர். அவர் தற்போது தளபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் ஆடினால் எப்படி இருக்கும் என்று நடித்துக் காட்டினார். இதை பார்த்துவிட்டு ராமராஜன் கலக்கப்போவது யாரு என்று சொல்லிவிட்டு நீங்கள் ஒருவரே கலக்கி விட்டீர்கள் என்று அமுதவாணனை புகழ்ந்து தள்ளு இருக்கிறார் அந்த புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment