வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதில் பிரகாஷ்ராஜின் அலுவலகத்திற்கு நேராக செல்லும் தளபதி, நேருக்கு நேர் பிரகாஷ்ராஜை மிரட்டும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறது. இளையதளபதி தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவர் நடிப்பில் 66-வது படமாக வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்தார். கடந்த பொங்கல் அன்று இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தபடம் சுமார் 300 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், நடிகர் பிரபு, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். மேலும் அஜித்தின் துணிவு படத்துடன் இந்த படம் நேரடியாக மோதியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் வசூல் குறித்து அவ்வப்போது படக்குழுவினரே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் படம் சுமார் 350 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருந்ததாக படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தற்போது தொடர்ந்து தளபதி அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகிவிட்டார். அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67 புது படமான லியோ படத்தின் நடித்து வருகிறார். சமீபத்தில் லியோ படத்தில் இருந்து ஒரு குட்டி டீசரை வெளியிட்டு படக்குழுவினர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர். அதில் புதுவித கெட்டப்புடன் சாக்லேட் ஃபேக்டரியில் நின்று கொண்டு கத்தியை சாக்லேட் சிரப்பில் நனைத்து அதை எடுத்து பிளடி ஸ்வீட் என்று சொல்வது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது் தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருவதால் விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு மேலும் குஷிப்படுத்தும் விதமாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர். பிரகாஷ்ராஜின் அலுவலகத்திற்கு நேராக செல்லும் தளபதி அவரை மிரட்டி விடும் காட்சிகளை பதிவிட்டுள்ளது. இந்த காட்சிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதே போல் நடிகை குஷ்பூ நடித்த காட்சிகளையும் விரைவில் படக்குழு வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த காட்சியை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Prime Video IN