பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கேட்டரிங் சர்வீஸ் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராதிகாவை தற்போது அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார் பாக்யா. எந்த ஆங்கிலத்தை வைத்து தன்னை அசிங்கப்படுத்தினாரோ அதே ஆங்கிலத்தில் பேசி ராதிகாவை ஓடவிட்டு இருக்கிறார் பாக்யா. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது் ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் டிவி ஒரு கட்டத்தில் யூ டர்ன் அடித்து தற்போது பல மெகா சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் குறிப்பிட தகுந்த மெகா சீரியல் ஆக இருப்பது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் ஹீரோ கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்கியா, இரண்டாவது மனைவி ராதிகா, முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார் கோபி. முதல் மனைவி திருமண சமையல் ஆர்டர்கள், கேட்டரிங ஆர்டர்களை எடுத்து அங்கு சமைத்து அதில் வரும் வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியா ஒரு ஐடி கம்பெனியின் கேன்டீன் ஆர்டரை எடுப்பதற்காக செல்கிறார். ஆனால் அங்கு வேலை செய்து வரும் ராதிகா, பாக்யா நன்றாக சமைக்க மாட்டார் என்கிற பொய்யை சொல்லி அவருக்கு அந்த ஆர்டர் கிடைக்க விடாமல் செய்கிறார். பின்னர் ஒரு ஹோட்டலில் இருந்து ஆர்டர் எடுக்கிறது அந்த கம்பெனி. அங்கு வாங்கும் உணவு சரியில்லாத காரணத்தினால் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இதனால் மீண்டும் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க அழைப்பு விடுக்கப்படுகிறது. மீண்டும் அங்கு கலந்து கொள்ளும் பாக்யா அந்த கேன்டீன் காண்ட்ராக்ட் ஐ தன்வசமாக்குகிறார். ஆனால் இதில் துளியும் விருப்பமில்லாத ராதிகா ஆங்கிலத்தில் பேசி பாக்யாவை மிகவும் அவமானப்படுத்துகிறார். ஐடி கம்பெனியின் உணவகத்திற்கு வேலைக்கு வரும் உங்களுக்கு ஆங்கிலம் கூட தெரியவில்லை என்று சொல்லி பாக்யாவை மிகவும் அசிங்கப்படுத்துகிறார் ராதிகா. இதனால் பாக்யா ஆங்கிலம் பயிற்றுவிக்கும் வகுப்பில் சேர்ந்து தற்போது ஆங்கிலம் பேச கற்றுக் கொள்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி கேட்டரிங் சர்வீஸ் இன் கடை திறப்பு விழா நடைபெறுகிறது. அதற்காக அனைவரும் வருகின்றனர். குறிப்பாக பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி உட்பட அனைவரும் அந்த விழாவிற்கு வருகை தந்திருக்கின்றனர். ராதிகாவும் அந்த விழாவிற்கு வருகை தந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரியை ராதிகா வாங்க அத்தை என்று அழைக்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி ஏதோ உன்னை பார்க்க வந்தது போல் அழைக்கிறாயே நான் என் மருமகள் கேட்டரிங் சர்வீஸ் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார். பின்னர் ராதிகா அருகில் வரும் பாக்யா கடை திறப்பு விழாவிற்கு வந்ததற்கு நன்றி என்று ஆங்கிலத்திலேயே பேசி ராதிகாவை பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார் பாக்யா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது நீங்களும் அந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television