என் Wife-அ பாத்துக்க எனக்கு தெரியும்.! நீங்க எல்லாம் வெளிய போங்க.! சரஸ்வதி பெற்றோரை அசிங்கப்படுத்திய தமிழ்.!

தனியாக வாழ்ந்து வரும் தமிழையும் சரஸ்வதியும் வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த சரஸ்வதியின் அம்மாவையும் அப்பாவையும் தமிழ் அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ள ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் கதாநாயகனாக தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் தீபக்கும் கதாநாயகியாக சரஸ்வதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை நட்சத்திராவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த தொடர் படிக்காத சரஸ்வதியை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் இருப்பதாக நாடகத்தின் கதை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் திடீரென நாடகத்தில் ஒரு திருப்பமாக வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ட்ரி கொடுக்கிறார். அர்ஜூன் கதாநாயகனின் தங்கையான ராகினியை மயக்கி அவரை திருமணம் செய்து உள்ளே வருகிறார். உள்ளே வந்த பின்பு தான் அவருக்கும் தமிழின் குடும்பத்திற்கும் ஏற்கனவே இருக்கும் பழைய பகை தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் Wife-அ பாத்துக்க எனக்கு தெரியும்.! நீங்க எல்லாம் வெளிய போங்க.! சரஸ்வதி பெற்றோரை அசிங்கப்படுத்திய தமிழ்.! 1

விளம்பரம்

தமிழின் குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று அர்ஜூன் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முன் கதையாக அர்ஜுனனின் அப்பாவும் அக்காவும் இறந்ததற்கு தமிழின் அம்மா கோதை தான் காரணம் என்று அவர்கள் இந்த குடும்பத்தை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது கதைப்படி தமிழ் அவரது தம்பி கார்த்தி மற்றும் அவரது தங்கை கணவர் அர்ஜூன் ஆகிய மூன்று பேருக்கும் கோதை ஒரு டாஸ்க் ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் யார் தங்களுடைய திறமையால் இன்னொரு கம்பெனியை விலைக்கு வாங்குகிறார்களோ அவர்களுக்கு கோதை இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தின் சேர்மன் பதவியை தர இருப்பதாக போட்டி ஒன்றை வைத்து இருக்கிறார். இதற்காக மூன்று பேரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அர்ஜூன் ஏதாவது ஒரு கம்பெனியை விலைக்கு வாங்குவதற்கு கமிஷன் கூட கொடுக்க ரெடியாக இருக்கிறார். இப்படி பின்வாசல் வழியாக அர்ஜூன் வெற்றி பெற நினைக்கிறார். ஆனால் இதை கோதை கண்டுபிடித்து அர்ஜுனை கண்டிக்கிறார்.

தொடர்புடையவை  "முனீஷ் ராஜாவை பிரிந்து விட்டேன்.! என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா" கதறி அழுத ராஜ்கிரண் மகள்.!

என் Wife-அ பாத்துக்க எனக்கு தெரியும்.! நீங்க எல்லாம் வெளிய போங்க.! சரஸ்வதி பெற்றோரை அசிங்கப்படுத்திய தமிழ்.! 3

விளம்பரம்

ரு கட்டத்தில் அர்ஜூனும் தமிழும் தனியாக பேசிக் கொண்டிருக்கும்போது அர்ஜுன் ஆட்களை செட்டப் செய்து தன்னை குத்தி கத்தியால் குத்துமாறு செய்து விடுகிறார். ஆனால் வெளியில் வந்து தமிழ் தான் தன்னை கத்தியால் குத்தியது போல நாடகமாடுகிறார். இதை தெரிந்து கொள்ளும் கோதை என் மகளின் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறாயா என்று சொல்லி தமிழை கோபமாக கேட்கிறார். இதனால் கோபமான தமிழ் இனிமேல் இந்த வீட்டிற்குள் நான் வரமாட்டேன் என்று சொல்லி சரஸ்வதியை அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார். இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனியாக வாழ்ந்து வரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த சரஸ்வதியின் அம்மாவும் அப்பாவும் வந்துள்ளனர். ஆனால் என் மனைவியை காப்பாற்ற எனக்கு தெரியும் என்று சொல்லி அவர்களை தமிழ் அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ள ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment