பாக்கியாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட இனியா மற்றும் சரண்.! இன்றைய ப்ரோமோ.!

பாக்கியலெட்சுமி சீரியலில் தற்போது இனியா தனது ஆண் நண்பருடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரை பாக்கியலட்சுமி பார்த்து விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலெட்சுமி தொடரில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலெட்சுமி. தமிழகத்தின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கதாநாயகியாக இருக்கும் பாக்கியா தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக ஆங்கில வகுப்பில் இணைந்து இருக்கிறார். இங்கு அவருக்கு ரஞ்சித்துடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கதை அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க டியூஷனுக்கு சென்றுள்ள இனியாவுக்கு சரண் என்கிற ஆண் நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் இனியாவுடன் நெருங்கிப் பழகுகிறார். இனியவை ஒருதலையாக காதலித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட இனியா மற்றும் சரண்.! இன்றைய ப்ரோமோ.! 1

விளம்பரம்

தனது காதலை இனியாவிடம் மறைமுகமாக கூறி இருக்கிறார் சரண். ஆனால் இனியா, தன்னை சரண் காதலிப்பது தெரிந்தும், தெரியாதது போல இருந்து வருகிறார். இனியாவை டியூஷனில் விட்டு மீண்டும் அழைத்துச் செல்வதற்காக அவரது தாத்தா ராமமூர்த்தி இதுநாள் வரை வந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு புதிதாக சைக்கிள் வாங்கி சரணும் இனியாவும் தினமும் பேசிக்கொண்டு வீட்டிற்கு நடந்து வருகின்றனர். சரணும் இனியாவும் நெருங்கி பழகுவது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் ஆங்கில வகுப்பு முடித்து வெளியே வரும் பாக்யா இவர்கள் இருவரையும் பார்த்து விடுகிறார். பாக்யாவை பார்த்த இனியா இன்று நான் தொலைந்தேன் என்று பயத்துடன் இருக்கிறார். ஆனால் அருகில் வரும் பாக்யாவோ எந்தவித பதட்டமும் இல்லாமல் சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து இனியாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

தொடர்புடையவை  தனலட்சுமிக்கு தரமான ஆப்பு வைத்த நரகவாசிகள்.! உயிரை குடுத்து விளையாடி இப்படி ஆயிடுச்சே

பாக்கியாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட இனியா மற்றும் சரண்.! இன்றைய ப்ரோமோ.! 3
இனியாவிடம் பேசும் பாக்யா ஏன் இப்பொழுதெல்லாம் தாத்தா வருவதில்லை? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் சரண் நான் தினமும் இந்த வழியாகத்தான் போகிறேன் ஆண்ட்டி, அதனால் தாத்தாவை வர வேண்டாம் என்று நான் தான் சொன்னேன். எதற்கு அவர் இந்த வயதான காலத்தில் வந்து காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் சரணை வீட்டிற்கு அழைக்கிறார் பாக்யா. அப்போது எந்த வீடு என்று சரண் கேட்க, பாக்யாவின் முகம் சுருங்கி போகிறது. பிறகு இனியா நான்தான் தனது தந்தையுடன் இருப்பதை சரணிடம் கூறியதாக சொல்கிறார். ஆனால் பாக்யாவோ நீ எங்கள் வீட்டிற்கு வா என்று அழைக்கிறார். மேலும் உனக்கு சாப்பிட பிடிக்குமா என்று கேட்க எனக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் என்று சரண் பதிலளிக்கிறார். அப்போது ஒரு நாள் வீட்டிற்கு வா பிரியாணி செஞ்சு அசத்திடலாம் என்று பாக்யா பதிலளிக்கிறார். பாக்யாவின் இந்த மாற்றத்தை சிறிதும் எதிர்பார்க்காத இனியா அதிர்ச்சியில் உறைந்துப் போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  கயல் சீரியல் நடிகை அபிக்கு நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய வீடியோ.!

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment