எதிர்நீச்சலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கால் உடைந்த நிலையில் வாக்கர் உதவியுடன் நடந்து வருகிறார். இதை பார்த்த ராதிகா பதறி போய் அவரிடம் நலம் விசாரித்து இருக்கிறார். தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் அந்த படத்தில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களை வென்றார். பின்னர் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் படத்திற்கு பின்னர் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் வேறு எந்த தமிழ் படமும் நடிக்கவில்லை. பின்னர் முழுவதுமாக மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடிப்பதிலிருந்து மிகப்பெரிய இடைவேளை எடுத்துக் கொண்டார்.

நடித்துக் கொண்டிருந்த போதே பல நடிகைகளுக்கு பின்னணி பேசி இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கும், அந்நியன் படத்தில் சதாவிற்கும், பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் ஸ்ரேயாவிற்கும் அவர் பின்னணி பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு படங்களில் அவர் பின்னணி பாடலும் பாடியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வந்த அவர், சென்னை சில்க்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், ஆச்சி மசாலா போன்ற பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் அவர் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் பாவமான பெண்ணாக நடித்து வருகிறார். இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக கனிகாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கனிகா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தியும், வீடியோக்கள் வெளியட்டும் ரீல்ஸ் செய்தும் அதை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். கால்கள் உடைந்த நிலையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புதிய பூட்ஸுடன் நடக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன்.! என்று பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கனிகாவுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பத்தொடங்கினர். நடிகை ராதிகா சரத்குமாரும் ஓ டியர் டேக் கேர், உன் கால்களுக்கு என்ன ஆனது என்று கமெண்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த கனிகா, என் கணுக்காலில் எலும்பு முறிவு மற்றும் முழங்கால் தசைநார் காயம் என்று பதிவிட்டு இருக்கிறார். விரைவில் கனிகா குணமடைந்து சீரியலுக்கு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.