சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்த மீனா.! முத்து ரங்கநாயகி போல குதிரை வண்டியில் என்ட்ரி .!

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா சினிமா துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அவருக்கு மிகப் பிரம்மாண்டமாக விழா ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு முத்து படத்தில் வந்த ரங்கநாயகி போல மீனா குதிரை வண்டியில் இருந்து இறங்கி இருக்கிறார். அந்த Cute ஆன வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகைகள் ராதிகா, ரோஜா, தேவயானி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகைகளுடனும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1990களில் நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அப்போது இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்த மீனா.! முத்து ரங்கநாயகி போல குதிரை வண்டியில் என்ட்ரி .! 1

விளம்பரம்

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தார். பின்னர் அதே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் மீனா. குறிப்பாக முத்து, எஜமான், வீரா போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆன வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா நடிகர் விஜயுடன் இணைந்து தெறி என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து நைனிகா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2022 ஜூன் மாதம் வித்யாசாகர் ராவ் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். கணவர் இறப்புக்குப் பின்னர் அதிக அளவில் வெளியில் வராத மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

தொடர்புடையவை  தம்பி என்ன தனியா விட்டுட்டு போய்ட்டியே.! தம்பி உடலுக்கு அருகில் நின்று கலங்கிய வடிவேலு.!

சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்த மீனா.! முத்து ரங்கநாயகி போல குதிரை வண்டியில் என்ட்ரி .! 3

விளம்பரம்

இந்த நிலையில் நடிகை மீனா திரைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனால் விரைவில் அவருக்கு விழா ஒன்று நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த விழா தற்போது நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த விழாவில் நடிகை ராதிகா, ரோஜா, தேவயானி, நடிகர் விஜயகுமாரின் மகள்களாக இருக்கும் ப்ரீத்தா, ஸ்ரீதேவி மற்றும் நடிகைகள் சங்கவி, சங்கீதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போனி கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவிற்கு வெள்ளை நிற உடையில் முத்து படத்தில் வந்த ரங்கநாயகி போல செம்ம Cute ஆக குதிரை வண்டியில் வந்து இறங்கியுள்ளார் மீனா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment