சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கும் கமலஹாசன்.! Glimpse வீடியோவுடன் அதிகாரபூர்வமாக அறிவித்த கமல்.!

நடிகர் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் அடுத்ததாக சிலம்பரசனை வைத்து படத்தை தயாரிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சிலம்பரசனின் 48வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்க இருப்பதை ஒரு குட்டி கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்த வீடியோவை ராஜ்கமல் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மற்றும் சிலம்பரசன் தனது twitter பக்கத்திலும் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். உலகநாயகன் கமலஹாசன் திரைத்துறையில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருபவர். இவர் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கி, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கோலொச்சி வருகிறார். நடிப்பது மட்டுமின்றி பாடுவது, படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது, அரசியல்வாதி என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமலஹாசன். 1981 ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த நூறாவது படமான ராஜ பார்வை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் கமலஹாசன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கும் கமலஹாசன்.! Glimpse வீடியோவுடன் அதிகாரபூர்வமாக அறிவித்த கமல்.! 1

விளம்பரம்

அன்று தொடங்கி இன்றுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார் கமல். மேலும் பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார் சமீப காலமாக படங்களை தயாரிப்பதை குறைத்துக் கொண்ட கமல் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தயாரித்து நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் தொடர்ந்து அவர் படங்களை தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் புதுப்பிக்கப்பட்டு வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசனின் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோருடன் இணைந்து தனது அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார் கமலஹாசன்.

விளம்பரம்

 

தொடர்புடையவை  'தர்பார்' படத்தின் அப்டேட்! ஆதித்யா அருணாச்சலமாக ரஜினி!!

இந்த நிலையில் நேற்று ராஜ்கமல் பிலிம்ஸ் தனது 56வது படம் தயாரிப்பு குறித்த ஒரு அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரத்தம் மற்றும் போர் என்ற தலைப்பில் சிகப்பு கலர் தீமூடன் அந்த வீடியோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது சிலம்பரசனின் 48-வது படத்தை ராஜ்கமல் ஃபிலிம் தயாரிக்க இருக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது அந்த நிறுவனம்.்இந்த வீடியோவை தனது பக்கத்தில் ஷேர் செய்த சிலம்பரசன் தனது கனவுகள் மெய்யாகி வருவதாக பகிர்ந்திருக்கிறார்.நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the Below Video..!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment