பிக்பாஸில் கலந்து கொண்டிருந்த ஜனனி தற்போது சமூக வலைத்தளத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதனால் ஜனனிக்கு திருமணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள். பச்சை நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு செம க்யூட்டாக இருக்கிறார் ஜனனி. அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்தவர் ஜனனி. இவர் இலங்கையில் உள்ள ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் உணவை ருசி பார்த்து அது பற்றி ரிவ்யூ சொல்லும் வேலையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இதனால் ஜனனிக்கு மிக அதிகமான ரசிகர் பட்டாளம் பெருகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனனி பேசும் அழகு தமிழுக்காகவே இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் டிக் டாக் செயலியில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து வந்தார் ஜனனி. டிக் டாக் செயலி இந்தியாவில் முடங்கிய பிறகு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, அப்போது வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டார் ஜனனி. ஆரம்ப முதலே ஜனனிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இருந்து வந்தது. இலங்கை ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஜனனிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வந்தனர்.

இதனால் ஜனனி குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமாக மாறினார். இந்த நிலையில் ஆரம்பத்தில் தனியாக விளையாடி வந்த ஜனனி, ஒரு கட்டத்தில் நண்பர்கள் குழு உடன் சேர்ந்து கொண்டு விளையாடத் தொடங்கினார். இது பலருக்கும் பிடிக்கவில்லை. தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணத்திற்கு மாறத் தொடங்கினார் ஜனனி.

இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஜனனிக்கு குறைவான வாக்குகளை அளித்து வெளியேற்றினார். ஆனால் இலங்கை ரசிகர்கள் வேண்டுமென்றே எங்களை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்க மாட்டோம் என்றும் ஜனனி வெளியேற்றத்திற்கு பிறகு போர்க்கொடி தூக்கத் தொடங்கினர்.

வெளியே வந்த பிறகு ஜனனி சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பச்சை நிற பட்டுப்புடவையுடன் தலை நிறைய மல்லிகை பூ, ஆபரணங்கள் அணிந்து கொண்டு மணப்பெண் கோலத்தில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த பலரும் ஜனனிக்கு திருமணமா என்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O